ETV Bharat / state

கரும்பு விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முன்பே நிலுவைத் தொகை! - கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வரும் 21 ஆம் தேதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.

before Diwali sugarcane farmers get their due amounts
author img

By

Published : Oct 19, 2019, 9:00 PM IST

தமிழ்நாட்டிலுள்ள இரண்டு பொதுத்துறை, 9 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய 123 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்தது.

இதுகுறித்து தொடர்போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று சர்க்கரை ஆலைகளின் ஆணையர் கரும்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டும் இன்றுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில், 2018- 19 ஆம் ஆண்டிற்காக நிலுவைத் தொகையான 123 கோடி ரூபாயை வழங்க சர்க்கரை ஆலை அலுவலர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த தொகை வரும் ஆக்டோபர் 21 ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டுவிடும் என்றும் தமிழக கரும்பு விவசாயிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

before Diwali sugarcane farmers get their due amounts
மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன்

இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நிலுவைத் தொகையை வழங்க முன்வந்தாலும் சில தனியார் சர்க்கரை ஆலைகள் 300 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை வைத்துள்ளன.

தீபாவளிக்கு முன்பு மாநில அரசு விவசாயிகளுக்கு இந்த தொகையை பெற்றுத்தரவேண்டும். அதேபோல், சர்க்கரை ஆலைகள் தாமதமாக நிலுவைத்தொகை வழங்குவதாலே விவசாயிகள் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்றும், கடனிற்கான வட்டியினை கரும்பு ஆலைகளே ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க:நிலுவை தொகை வழங்காமல் இழுத்தடிக்கும் கூட்டுறவு ஆலைகள்... கட்டிடத் தொழிலாளிகளாக மாறிய விவசாயிகள்

Intro:சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சக்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வரும் 21 ஆம் தேதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
Body:தமிழகத்தில் உள்ள 2 பொதுத்துறை மற்றும் 9 கூட்டுறவு சக்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 123 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று கோரி நீண்ட நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கடந்த ஜூலை மாதம் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சக்கரை ஆணையர் கரும்பு விவசாயிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இந்த நிலையில், 2018- 19 ஆம் ஆண்டிற்காக நிலுவைத் தொகையான 123 கோடி ரூபாயை வழங்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த தொகை வரும் ஆக்டோபர் 21 ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டுவிடும் என்றும் தமிழக கரும்பு விவசாயிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், "பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சக்கரை ஆலைகள் நிலுவைத் தொகையை வழங்க முன் வந்தாலும் தரணி, ராஜஸ்ரீ, அம்பிகா, சக்தி ஆகிய சர்க்கரை ஆலைகள் அரைத்த கரும்புக்கு 300 கோடிக்கு ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளன. தீபாவளிக்கு முன்பு விவசாயிகளுக்கு மாநில அரசு இதனை பெற்றுத்தர வேண்டும். அதேபோல், விவசாயிகள் கரும்பை பயிரிட கூட்டுறவு வங்கிகள் 15 மாதம் வரை வட்டியில்லாமல் கடன் வழங்குகிறது. இதற்குள் திரும்ப செலுத்தாவிட்டால் கடனுக்கான வட்டியுடன் ஆபராத வட்டி செலுத்த வேண்டும். இதனால் பயிரிட்டதில் எந்த லாபமும் இல்லாமல் போகிறது. சக்கரை ஆலைகள் தாமதமாக பணம் வழங்குவதால்தான் விவசாயிகள் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது எனவே இதனையும் கரும்பு ஆலைகளே ஏற்க வேண்டும்" என்று கூறினார்.

Conclusion:use file photo
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.