ETV Bharat / state

பீர் பாட்டில் வெடித்து டாஸ்மாக் பணியாளர் காயம்

டாஸ்மாக் கடையில் பீர் பாட்டில் வெடித்து ஊழியர் படுகாயம் அடைந்த சம்பவம் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீர் பாட்டில் வெடித்து டாஸ்மாக் பணியாளர் காயம்
பீர் பாட்டில் வெடித்து டாஸ்மாக் பணியாளர் காயம்
author img

By

Published : Jul 4, 2021, 12:42 PM IST

Updated : Jul 4, 2021, 1:00 PM IST

சென்னை: பூந்தமல்லியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுப்பானக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருபவர் மகாலிங்கம். இவர் நேற்று (ஜூலை 3) கடைக்கு வந்த மது பாட்டில்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது பெட்டியில் அடுக்கி வைக்கபட்டிருந்த பீர் பாட்டில் திடீரென வெடித்து சிதறியது.

பீர் பாட்டில் வெடித்து டாஸ்மாக் பணியாளர் காயம்

இதில் மகாலிங்கத்திற்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த ஊழியர்கள் மகாலிங்கத்தை மீட்டு அருகே உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான சிசிடிவி காட்சி பதிவு இன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து பூந்தமல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ட்விட்டர் தளம் மத வெறுப்பை பரப்புவதாக மேலும் ஒரு புகார்!

Last Updated : Jul 4, 2021, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.