சென்னை கோடம்பாக்கம் ஐடிஐ-யில் படித்துவரும் ஏழு மாணவர்கள் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது லோகேஷ்வரன், சர்வேஷ்வரன், ஆகாஷ் ஆகிய மூன்று மாணவர்கள் கடற்கரைக்கு அருகில் உள்ள கடலில் குளித்துள்ளனர்.
அப்போது மூன்று மாணவர்களும் அலையில் சிக்கி கடலில் தத்தளித்தனர். இதைக் கண்ட அருகிலிருந்த பொதுமக்கள் லோகேஷ்வரன் என்ற மாணவரை மட்டும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
எனினும், சர்வேஷ்வரன், ஆகாஷ் ஆகிய இரண்டு மாணவர்கள் கடலில் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக சாஸ்திரி நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:
’காவலன் செயலியை பயன்படுத்தக்கூடிய சூழல் ஏற்படாது’ - காவல் ஆணையர்