சென்னை எழும்பூர் பின்னி சாலையில் கூவம் ஆற்றுப்பாலம் உள்ளது. இதன் குறுக்கே மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகை ஒருபக்கம் சாய்ந்ததால் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னலில் இருந்து இடதுபுறம் திரும்பும்போது எத்திராஜ் கல்லூரி நோக்கி செல்லும் சாலையும், எழும்பூரிலிருந்து ருக்மணி சாலை வழியாக அண்ணா சாலை செல்வதற்கும் போக்குவரத்து காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். அதற்கு மாறாக எத்திராஜ், க்ரீம்ஸ் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு பிறகு பொதுப்பணித் துறையினர் கூவம் ஆற்றின் இருபக்க கரைகளையும் அகலப்படுத்தினர். தற்போது பெய்துவரும் மழை காரணமாக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையின் இரும்பு தூண் மண் சரிவு காரணமாக மண்ணில் புதைய தொடங்கியுள்ளது. இதனை கவனித்த போக்குவரத்து காவல் துறையினர் உடனடியாக அந்த சாலையை மூடி போக்குவரத்து மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
பின்னர் மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தற்போது மாநகராட்சி அலுவலர்கள் அந்த பெயர் பலகையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'மாத்துவோம்! எல்லாத்தையும் மாத்துவோம்! ஜனவரியில் கட்சி' - ரஜினிகாந்த்!