ETV Bharat / state

"வங்கிகள் மகளிர் உரிமை தொகையில் பிடித்தம் செய்யக் கூடாது" - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு! - Finance Minister Thangam Thennarasu

மகளிர் உரிமை தொகை பயனாளிகளின் பணத்தை வங்கிகள் பிடித்தம் செய்வதை தடுப்பது தொடர்பாக மத்திய நிதி அமைச்சரிடம் முறையிட உள்ளதாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.

வங்கிகள் மகளிர் உரிமை தொகையை பிடித்தம் செய்யக் கூடாது - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 1:56 PM IST

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளிடமிருந்து வங்கிகள் பணத்தை பிடித்தம் செய்யக் கூடாது எனவும், இந்த விவாகரம் குறித்து மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும் என்றும் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி ஏறத்தாழ ஒன்றரை கோடி மகளிர் பயன்பெரும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், உரிமை தொகை வழங்கும் நிகழ்வை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் பணத்தை பிடித்தம் செய்வதாக எழுந்த புகார் குறித்து தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, "இந்த திட்டத் தொடக்கத்தின் முதல் நாளே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது.

இது ஒரு மகத்தான சாதனை நிகழ்வாகும். இது குறித்து நாடே பாராட்டுகிறது. தமிழ்நாட்டின் இத்திட்டத்தைப் பற்றி மற்ற மாநிலங்களும் வியந்து பாராட்டி வருகின்றன. இந்நிலையில் ஆங்காங்கே சில குறைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமை தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன், மற்றும் உரிய தொகையை வங்கி கணக்கில் இருப்பு வைக்கவில்லை ஆகிய காரணங்களுக்காக சில வங்கிகள் பிடித்தம் செய்து கொள்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிட்டிங்களா?... அமைச்சர் கொடுத்த அப்டேட்!

இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மாநில வங்கிகள் குழுமத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் சில வங்கிகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல.

தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாக செலவினங்களுக்கு நேர் செய்யக்கூடாது என்று மாநில அரசுக்கும் வங்கிகளுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு அரசு மகளிரின் நல்வாழ்வுக்காக வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்பது குறித்து மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும். மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி, உதவி மைய தொலைபேசி எண் 1100- ஐ அழைத்து புகார் அளிக்கலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.

மகளிர் அளிக்கும் இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் தனது அறிக்கை வாயிலாக தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: வேலூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்... எங்கெல்லாம் செல்கிறார் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.