சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நேற்றிரவு (அக். 16) பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார். சாந்தோம் நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்புறம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.
இதனால் அவர் அழுது கொண்டிருந்த போது, ரஷிய தூதரக அலுவலக பாதுகாப்பு காவலர்கள் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாலியல் தொல்லை கொடுத்த இருவர் மீண்டும் அந்த வழியே வந்தனர். உடனடியாக, அந்த பெண் அளித்த தகவலின் பேரில் காவலர்கள் விரட்டி சென்று இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர். இதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பெயிண்ட் கம்பெனியில் அட்மினாக பணிபுரிந்து வந்த பெரம்பூரைச் சேர்ந்த பிரேம்குமார்(27), தனியார் வங்கியின் ஊழியரான பாலாஜி(26) ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையும் படிங்க...ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை