ETV Bharat / state

கருணாநிதி புகைப்படம் பயன்படுத்த தடையா? வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம் - அரசு விளம்பரங்கள்

தமிழகத்தில் அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம் பயன்படுத்தக் கூடாது என அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.

கருணாநிதி புகைப்படம் பயன்படுத்த தடை; சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளிவைத்தது

author img

By

Published : Sep 1, 2022, 2:53 PM IST

Updated : Sep 1, 2022, 3:04 PM IST

சென்னை: மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், கட் அவுட் கலாச்சாரத்தை நீதிமன்றம் தலையிட்டு தடுத்திருக்கும் நிலையில் தற்போது புகைப்பட கலாச்சாரம் பரவி வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அரசு விளம்பரங்களில் குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வரின் புகைப்படத்தை அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற உத்தரவையும், அரசியல் சாசனத்தையும் மீறிய செயல் எனத் தெரிவித்துள்ளார். இதுபோன்று மறைந்த தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்துவது வரலாற்றை திரிப்பதுடன், மற்ற முதல்வர்கள் பங்களிப்பை மறைமுகமாக குறைத்து மதிப்பிட வழி வகுத்து விடும் என்பதால், அரசு இணையதளங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், முன்னாள் முதல்வர்கள் மற்றும் சட்டப்படி அனுமதிக்கப்படாத தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தமிழில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்... சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு...

Last Updated : Sep 1, 2022, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.