சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் 7லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடம் மற்றும் சிறுவர் பூங்காவை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் திறந்துவைத்து, பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னையில் பணிபுரியக்கூடிய காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தேவைப்பட்ட உதவிகளை செய்வதற்காக நோடல் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகிறார்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு காவல்துறை சார்பாக உதவிகள் செய்து வருகிறோம். புத்தாண்டு கொண்டாடத்திற்கு அரசு தடை விதித்து உள்ளதால் ஹோட்டல், கிளப், கடற்கரை மற்றும் சாலைகளில் பொதுமக்கள் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்குள் பொதுமக்கள் செல்வதை தடுப்பதற்காக சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
காமராஜர் சாலை, ஈ.சி.ஆர் சாலை போன்ற இடங்களில் கூடுதலாக காவல்துறையினர் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையில் ஈடுபடவுள்ளனர். அதனோடு சென்னை முழுவதும் 300 சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க: உணவு ஆர்டர் செய்து 50 ஆயிரம் ரூபாயைப் பறிகொடுத்த பெண்: பெங்களூரில் அதிர்ச்சி!