சென்னை: சென்னை ஓட்டேரியில் சாந்தி(67) என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், தரைத்தளத்தில் நான்கு குடும்பங்கள், மேல் தளத்தில் ஐந்து குடும்பங்கள் என மொத்தம் ஒன்பது குடும்பங்கள் வாடகைக்கு குடியிருக்கின்றன. இந்த வீடுகளில் மொத்தம் 35 பேர் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று(நவ.27) காலை குடியிருப்பின் முன் பக்கம் உள்ள பால்கனி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது கீழே யாரும் இல்லாததால், நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தன.
இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இடிந்து விழுந்த கட்டிடம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று தெரிகிறது.
இதையும் படிங்க: காதலி பிறந்தநாளில் இளைஞர் செய்த சம்பவம்.. காவலர்கள் அதிர்ச்சி!