சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஃபானி புயல் நாளை அதி தீவிர புயலாக மாறி வட தமிழ்நாடு, ஆந்திரா அருகே 300 கி.மீ. தொலைவில் வர வாய்ப்பிருப்பதாகவும், இதனால் தமிழ்நாட்டிற்கு பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.
மேலும், நாளை (ஏப்ரல் 30), மே 1 ஆகிய தேதிகளில் வட தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
அதேபோல், கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.