சென்னை: பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் ஆணைப்படி எஸ்டி சான்றிதழ் வழங்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே சுமார் 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆணைப்படி எஸ்டி சான்றிதழ் வழங்கக்கோரி பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று(செப் 30) நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் மைக்கல் தாஸ் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நரிக்குறவர் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உடனடியாக எங்களுக்கு எஸ்டி சான்றிதழை வழங்க வேண்டும். இல்லை என்றால் நரிக்குறவர் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கூட்டு பாலியல் வன்புணர்வு: ஆறு பேர் மீது வழக்குப்பதிவு!