ETV Bharat / state

பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாட்டில் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு - தமிழ்நாட்டில் போலீசார் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு

author img

By

Published : Dec 5, 2022, 1:05 PM IST

சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கோவை கார் குண்டுவெடிப்பு மற்றும் மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.

இதனால் கூடுதல் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற இடங்களில் நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், பெரியமேடு, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தெலங்கானா முதலமைச்சர் மகளுக்கு சிபிஐ நோட்டீஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.