ETV Bharat / state

விழிப்புணர்வு மூலம் டெங்கு பரவலைத் தடுக்க முடியும் - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை - spread of dengue

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு பரவுவதைத் தடுக்க முடியும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
author img

By

Published : Oct 6, 2021, 3:38 PM IST

புதுச்சேரி: ராஜிவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவை இன்று (அக்.06) பார்வையிட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், டெங்கு மேலாண்மை குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,'மழைக்காலங்களில் கொசுக்கடியால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவக்கூடும் என்று கேள்வியுற்று அதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தேன்.

டெங்கு காய்ச்சலுக்கு நடைபெற்று வரும் சிகிச்சை, எதிர்காலத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினேன்.

டெங்குவிற்கு சிகிச்சை

டெங்கு பாதிப்பிற்கு சிகிச்சைப் பெற்றுவரும் குழந்தைகளைப் பார்த்தேன். அவர்கள் தற்போது நலமடைந்து வருகின்றனர்.

டெங்கு சிகிச்சைக்கு குழந்தைகளுக்காக ஆறு படுக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தேவைப்பட்டால் இன்னும் அதிகரிக்கப்படும்.

கொசு உற்பத்தியைத் தடுக்க பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் குப்பைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். அதனையும் கண்காணித்து வருகிறேன். டெங்கு சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகளை மருத்துவமனை செய்துவருகிறது.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளன' எனத் தெரிவித்தார்.

பள்ளிகள் திறக்க ஆலோசனை

தொடர்ந்து பேசிய அவர், 'இன்று காலை முதலமைச்சரை சந்தித்தபோது டெங்கு காய்ச்சலுக்கான முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருப்பது குறித்து விவாதித்தோம். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு பரவுவதைத் தடுக்க முடியும்.

பொதுமக்கள் அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். 100 விழுக்காடு இலக்கை அடைய இன்னும் மூன்று லட்சம் தடுப்பூசி மட்டுமே போடவேண்டி இருக்கிறது. பள்ளிகளைத் திறப்பதற்கான ஆலோசனைகளையும் அதற்கான முன்னேற்பாடுகளையும் பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது. அதன் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.

இதையும் படிங்க: டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.