அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் செயல்படும் பூங்கா பள்ளியில் வன உயிரின பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பூங்காப்பள்ளியில் “பறவைகளும், பறவைகளை இனம் காணுதலும்” என்ற தலைப்பில் பயிற்சி முகாம் இன்று நடத்தப்பட்டது. இதில், களப்பயிற்சியாக பூங்காவினுள் அழைத்துச் சென்று மாணவ, மாணவிகளை அழைத்து சென்று பறவைகளை நேரடியாக இனம் மற்றும் அடையாளம் காணும் பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் முக்கியமாக பறவைகளை எவ்வாறு இனம் கண்டறிதல், அது தொடர்பான பல்வேறு நுணுக்கங்களை தெரிந்து கொள்ளும் முறைகள், நேரடியாக எவ்வாறு களப்பதிவேடு செய்தல் போன்ற விபரங்கள் முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதியில் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.