ETV Bharat / state

மாயமான வாலிபர் சடலமாக மீட்பு! - avadi death

ஆவடி : மாயமான வாலிபரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி
author img

By

Published : Mar 29, 2019, 9:13 PM IST

ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியைச்சேர்ந்தவர் மகேஷ் (27). இவர் தனதுதாய் பச்சையம்மாளுடன் வசித்து வருகிறார். குடிபழக்கத்திற்கு அடிமையான மகேஷை, தாய் பச்சையம்மாள் மூன்று மாதத்திற்கு முன்பு மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார். மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை முடிந்து மகேஷ் குணமடைந்ததையடுத்து, பச்சையம்மாள் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனையடுத்து, மார்ச் 25ஆம் தேதி மகேஷ் வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். பல்வேறு இடங்களில் தேடி எந்த தகவலும் கிடைக்காததையடுத்து, பச்சையம்மாள் போலீஸில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், ஆவடி வி.ஜி.என் நகர் பகுதியிலுள்ள மரத்தின் கீழ் மகேஷ் இறந்த நிலையில் கிடந்ததாக போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், மரத்தின் கீழ் அழுகிய நிலையில் கிடந்த மகேஷ்-ன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகேஷ் இறப்பு குறித்த காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னர்தான் தெரியவரும் என போலீஸார் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:ஆவடியில் மாயமான வாலிபர் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Body:ஆவடியை அடுத்த சேக்காடு ரெட்டி தெருவை சேர்ந்தவர் மகேஷ் /27 .கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை .இவர் தனது தாய் பச்சையம்மாள் உடன் வசித்து வந்தார் .இதற்கிடையில் மகேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனை அடுத்து அவரை, பச்சையம்மாள் போதை மறுவாழ்வு இல்லத்தில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர் . பின்னர் குணமான அவரை சமீபத்தில் அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி மதியம் மகேஷ் வீட்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார். இதனை அடுத்து அவரை பச்சையம்மாள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. புகாரின் அடிப்படையில் ஆவடி இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் காலை ஆவடி வி.ஜி.என் நகர் பகுதியில் உள்ள ஒரு மரத்தின் அருகில் மகேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மகேஷ் மர்ம சாவு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் மகேஷ் இறப்பு குறித்து மர்ம காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இச் சம்பவம் சேக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Conclusion:மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் மகேஷ் இறப்பு குறித்து மர்ம காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இச் சம்பவம் சேக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.