சென்னை: ஆவடியை அடுத்த திருநின்றவூர், நத்தம்பேடு, கம்பர் தெருவைச் சேர்ந்தவர் நரேந்திரன் (23). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருப்பினும், தனக்கு திருமணமானதை மறைத்து திருநின்றவூர் சுதேசி நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.
அந்தச் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி, பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார். இதனால், அந்தச் சிறுமி தற்போது கர்ப்பமாகியுள்ளார். இந்த விவரம் சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவர அவர்கள் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நரேந்திரன் மீது புகாரளித்தனர்.
இதையடுத்து ஆய்வாளர் லதா தலைமையிலான குழு நரேந்திரனை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.