ETV Bharat / state

ரிலையன்சுக்கு நிலம் குத்தகைக்கு விட்டதில் ரூ.2 கோடி வருவாய் இழப்பு - இந்திய தணிக்கை துறை தகவல்! - chennai news

ரிலையன்ஸ் தனியார் நிறுவனத்திற்கு நிலம் 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டதில் 2 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது.

jio
ஜியோ
author img

By

Published : Apr 22, 2023, 10:18 AM IST

சென்னை: M/s ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்திற்கு 20 ஆண்டுகள் நிலம் குத்தகைக்கு விடப்பட்டதில் 2 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக என இந்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தணிக்கை துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், "M/s ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்த நிலத்தைப் பொறுத்தமட்டில், நடவடிக்கைகளுக்கான சரியான விகிதமான 12.5 விழுகாட்டிற்குப் பதிலாக, வணிக பொதுநல நடவடிக்கைகளுக்குப் பொருந்தக்கூடிய ஒரு விழுக்காடு குத்தகை வாடகை விகிதத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் ரூ.2.67 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அரசாணை வன நிலத்திற்கான குத்தகை வாடகையை நிர்ணயித்து வெளியிட்டது. வன நிலத்திற்கான குத்தகை வாடகை, தொழில் / வணிக நோக்கத்திற்கு 12.5 விழுக்காடும், பொதுநல நோக்கத்திற்கு நிலத்தின் சந்தை மதிப்பில் ஒரு விழுக்காடு ஆகும். மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வன நிலத்தின் சந்தை மதிப்பு திருத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

தற்போது கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்ததில், வத்தலகுண்டு முதல் கொடைக்கானல் வரையிலான சாலையின் வலதுபுறம் தரைமட்டத்திற்கு கீழே 25 செ.மீ அகலமும், 60 செ.மீ ஆழமும், 36.20 கி.மீ நீளத்துடன் கொண்ட மொத்த பரப்பளவான 96,877 சதுர அடி (0.90 ஹெக்டேர்) வன நிலத்தினை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்திற்கு, 20 ஆண்டுகளுக்கு அதாவது 1 நவம்பர் 2016 தேதியிட்ட உத்தரவின்படி குத்தகைக்கு விடப்பட்டது. கண்ணாடி ஒளி இழை வடம் பதிக்க இந்நிலம் பயன்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாவது மேற்கோள் காட்டப்பட்ட அரசாணையின்படி, குத்தகைதாரர் ஒரு வருடத்திற்கான வங்கி உத்தரவாதத்தையும் 20 ஆண்டுகளுக்கு குத்தகை வாடகையையும் முன்பணமாக செலுத்த வேண்டும். குத்தகை வாடகையானது, பொதுநல நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கு பொருந்தக் கூடிய சந்தை மதிப்பில் ஒரு சதவிதமாக நிர்ணயிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கான 23 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என கணக்கிடப்பட்டது.

மேலும் குத்தகையின் நோக்கம் வணிக நடவடிக்கையாக இருப்பதால், முதலில் குறிப்பிடப்பட்ட அரசு உத்தரவின்படி 12.5 விழுக்காடு குத்தகை வாடகை விகிதம் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். குத்தகை வாடகை விகிதத்தை தவறாக கடைபிடித்ததால், 20 ஆண்டுகளுக்கு குத்தகை வாடகையாக 2 கோடியே 67 லட்ச ரூபாய் குறுகிய வாடகை விதிக்கப்பட்டது என தணிக்கையில் (டிசம்பர் 2020) கண்டறியப்பட்டுள்ளது.

இது சுட்டிக்காட்டப்பட்ட பிறகு, குத்தகை வாடகையின் வேறுபட்ட விகிதத்திற்கான கோரிக்கையை (டிசம்பர் 2020) துறை எழுப்பியது. தற்போது மீட்புக்கான அறிக்கை எதிர் நோக்கப்படுகிறது (ஜனவரி 2022). மேற்கூறியவற்றை ஏற்கும் போது, M/s ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் பணியானது வணிக நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளாமல், பொதுநல நடவடிக்கையாக தவறாகக் கருதப்பட்டு, ஒரு சதவீதத்தில் கணக்கிடப்பட்டது என்று அரசு (டிசம்பர் 2021) பதிலளித்தது. மேலும் நிலுவைத் தொகையான 11.5 விழுக்காட்டை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக" அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு அதிமுக நிராகரிப்பா? - எஸ்பி வேலுமணி ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.