திருமலை, திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான தமிழ்நாட்டில் உள்ள சொத்துகளைப் பொது ஏலம் விடப்போவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இது குறித்து தேவஸ்தானம், "கடந்த பிப்ரவரி 29ஆம் தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டத்தில் திருமலை, திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான தமிழ்நாட்டில் உள்ள 23 சொத்துகளை ஏலம்விட முடிவுசெய்யப்பட்டது.
அதையடுத்து ஏப்ரல் 20ஆம் தேதி அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சொத்துகளை விற்க இரு குழுக்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் எட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சொத்துகளை விற்பதற்கான நடைமுறைகள் முடிவடைந்துள்ளன" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரிசர்வ் வங்கி வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்