ETV Bharat / state

வங்கி ஏடிஎம்மில் வெடித்த துப்பாக்கி ; சென்னையில் பரபரப்பு..! - இன்றைய சென்னை செய்திகள்

Chennai Gun Misfire in ATM: சென்னையில் தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பி கொண்டு இருந்தபோது காவலாளி கையில் இருந்தது துப்பாக்கி கீழே விழுந்து வெடித்து காவலாளியின் வயிற்றில் தோட்டா பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

atm gunman injured due to gun misfire chennai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 6:12 PM IST

சென்னை: ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழாவது அவென்யூவில் தனியார் வங்கி ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் தனியார் நிறுவனம் மூலம் பணம் நிரப்பும் பணியானது இன்று காலை நடைபெற்று உள்ளது. அப்போது அதில் பணம் நிரப்பும் நிறுவனத்தின் கன்மேனாக வந்த நபர் துப்பாக்கியை துடைத்துவிட்டு அருகில் வைக்கும்போது கீழே விழுந்து வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தில் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய தோட்டா கன்மேன்-னின் இடது பக்க வயிற்றில் பாய்ந்து உள்ளது. துப்பாக்கி தோட்டா பாய்ந்து விபத்துக்குள்ளானதால் கன்மேன் அந்த இடத்திலேயே மயங்கி சரிந்துள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த சக ஊழியர்கள் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதை நிறுத்திவிட்டு, அவர்கள் வந்த வாகனத்திலேயே கன்மேனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.

அங்கு கன்மேனை பரிசோதித்த மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்து, வயிற்றில் பாய்ந்த தோட்டாவை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துப்பாக்கியை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதன் பிறகு இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயப்பட்டவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ராணாகுமார் (30) என்பது தெரியவந்துள்ளது. இவர் சென்னையில் தங்கி தனியார் வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் கன்மேனாக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ராணாகுமார், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டார் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தின் மூலம் தனியார் வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் கன்மேனாக பணியில் சேர்ந்து உள்ளார். இவர் இன்று காலை வழக்கமான பணியில் இருந்த போது டபுள் பேரல் எனப்படும் துப்பாக்கியை சுத்தம் செய்து கீழே வைத்த போது வெடித்து அவரது வயிற்றில் தோட்டா பாய்ந்து உள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் ராணா குமாருக்கு முறையாக துப்பாக்கியை கையாளும் பயிற்சி உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் ஏடிஎம்மில் பணம் நிரப்பி கொண்டு இருந்தபோது காவலாளியின் கையில் வைத்திருந்த துப்பாக்கி கீழே விழுந்து வெடித்து அவரின் வயிற்றிலே தோட்டா பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: எம்பி கௌதம சிகாமணிக்கு எதிரான வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.