காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெரும் அத்திவரதர் நிகழ்ச்சியில், முறையான பாதுகாப்பு இல்லாமல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதால் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசு தெரிவித்து வரும் நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 27பேர் வரை இறந்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அத்திர வரதர் நிகழ்ச்சி வரும் பக்தர்களுக்கு மத்திய பாதுகாப்பு படை பிரிவின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரித்த நீதிபதிகள் நாளை விசாரிப்பதாக கூறி ஒத்தி வைத்தனர்.