ஏத்தர் எனர்ஜி மின்சார வாகன தொழிற்சாலை
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனமாகும். பெங்களூருவைச் சேர்ந்த இந்நிறுவனம், ஓசூரில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் தொழிற்சாலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏத்தர் எனர்ஜி மின்சார ஸ்கூட்டர் ஆண்டுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் ஸ்கூட்டர்கள் மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேட்டரிகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த தொழிற்சாலையில், உள்நாட்டு மூலப்பொருள்கள் மூலமாகவே 90 சதவீத பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
உள்நாட்டிலேயே மின்சார ஸ்கூட்டர்களுக்கான பேட்டரிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் வழங்கும் ஏராளமான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் தொழிற்சாலை ஓசூரில் அமைக்கப்பட்டுள்ளதாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 40 நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டம்
மின்சார வாகன உற்பத்திக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் சிறப்பு சலுகை திட்டத்தின் கீழ் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த ஜனவரி இரண்டாம் தேதி முதல் உற்பத்தி பணிகளை தொடங்கியுள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏத்தர் எனர்ஜி மின்சார ஸ்கூட்டர் ஓசூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய வாகனங்களை மும்பை, புனே, அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அடுத்த கட்டமாக, ஓசூர் தொழிற்சாலையை தனது முக்கிய உற்பத்தி மையமாக மாற்றி அங்கிருந்து ஹைதராபாத், கொச்சி, கோயம்புத்தூர், கொல்கத்தா, கோழிகோடு, ஆகமதாபாத், மைசூர், ஜெய்ப்பூர், பனாஜி, புவனேஸ்வர், நாசிக், சூரத் உள்ளிட்ட நாட்டின் 15 மாநிலங்களில் உள்ள 27 நகரங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
பின்னர் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் 40 நகரங்களுக்கு தங்களது விற்பனை சந்தையை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சொந்த பேட்டரி தொழில்நுட்பம்
நாட்டில் உள்ள மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஏத்தர் நிறுவனம் மட்டும்தான் தங்கள் வாகனங்களுக்கான பேட்டரியை தாங்களே உற்பத்தி செய்கின்றன. இதற்கான தொழில்நுட்பத்தை அந்நிறுவனமே சொந்தமாக கண்டறிந்து, 13 அறிவுசார் காப்புரிமை பெற்றுள்ளது.
ஏத்தர் எனர்ஜி மின்சார ஸ்கூட்டர் தற்பொழுது 2.9 கிலோ வாட் திறன் கொண்ட லித்தியம்-அயான் பேட்டரி ஏத்தர் எனர்ஜியால் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும், நீண்ட நேரம் சார்ஜ் நீட்டிக்கும் வசதியும் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்சார உற்பத்தி நிறுவனங்களில் அடுத்தகட்ட இலக்கான பேட்டரி தயாரிப்பில் தாங்களும் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் மூலமாக தங்களது வணிகத்தை பரவலாக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கழிவுகளை வெளியேற்றாத தொழிற்சாலை
ஏத்தர் எனர்ஜி மின்சார ஸ்கூட்டர் ஏத்தர் நிறுவனத்தின் ஓசூர் தொழிற்சாலையிலிருந்து எந்தவிதமான புகைகளும் வெளியேற்றப்படவில்லை, இங்கு வெளியாகும் மின்சாரக் கழிவுகள் அனைத்தும் முறையான வகையில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்றும், இங்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் அனைத்தும் முழுமையாக மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவடையும் மின்சார வாகன சந்தை
ஏத்தர் எனர்ஜி மின்சார ஸ்கூட்டர் சென்னை ஐஐடி பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தருண் மேத்தா, சுவப்னில் ஜெயின் ஆகிய இருவரால் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலை குறித்த ஏத்தர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர், நிறுவனர் தருண் மேத்தா பேசுகையில், "ஓசூரில் தொடங்கப்பட்டுள்ள உற்பத்தி ஆலை எங்களது முக்கியமான மைல்கல். மின்சார வாகனங்களுக்கான நுகர்வோரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எங்களது சந்தையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஏத்தர் எனர்ஜி மின்சார ஸ்கூட்டர் ஓசூரில் நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலை முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. தமிழ்நாடு அரசின் மின்சார வாகன உற்பத்தி கொள்கைக்கு மிக்க நன்றி, இதன் காரணமாகவே இங்குள்ள நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு தேவையான உற்பத்திப் பொருள்களை பெற முடிகிறது" என்றார்.