சென்னை திருநின்றவூரில் உள்ள ஆக்ஸ்போர்டு பள்ளி சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர்.
மேலும் புகையில்லா போகியை கொண்டாட வேண்டும் என முழக்கமிட்டும் நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தியும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முக்கியமாக போகி பண்டிகையில் டயர், டியூப் உள்ளிட்டவற்றை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கும், உடல்நலத்துக்கும் தீங்கு ஏற்படும் என மாணவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். இந்த பேரணி நெமிலிச்சேரியில் தொடங்கி சி.டி.எச்.சாலை வழியாக இரண்டு கிலோ மீட்டர் சென்று திருநின்றவூர் காந்தி சிலை அருகே நிறைவு பெற்றது.
இதையும் படியுங்க: புகையில்லா போகி - விழிப்புணர்வு பயணம்