ETV Bharat / state

'ஊரடங்கால் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கலாம்... மக்களே உஷாரா இருங்க!' - உதவி காவல் ஆணையர் ஹரிகுமார்

சென்னை: ஊரடங்கின் காரணமாக வேலையிழப்பு, பொருளாதார இழப்பு, வியாபாரத்தில் பாதிப்பு காரணமாக குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று எம்.கே.பி. நகர் சரக காவல் உதவி ஆணையர் ஹரிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவல்துறை சார்பில் முன் எச்சரிக்கை செய்தி..

author img

By

Published : Jul 27, 2020, 11:55 PM IST

ஊரடங்கு காரணமாக வேலையிழப்பு, வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு, பணப் புழக்கம் இல்லாமை ஆகியவை காரணமாக பழைய குற்றவாளிகள், புதிதாக உருவாகும் குற்றவாளிகள் ஆகியோரால் குற்றச் சம்பவங்கள் அதிகம் ஏற்படும் என்றும், இதுபோன்ற சமயங்களில் பொதுமக்கள் மிகக் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், எம்.கே.பி. நகர் சரக காவல் உதவி ஆணையர் ஹரிகுமார் முன்னெச்சரிக்கை செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

  • மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
  • விலையுயர்ந்த சங்கிலிகள், வளையல்கள், மோதிரங்கள் அணிய வேண்டாம்
  • உங்கள் மொபைல்போன்களைப் பொதுஇடங்களில் அடிக்கடி பயன்படுத்த வேண்டாம்
  • அன்னியர்களுக்கு வாகனங்களில் லிஃப்ட் கொடுக்க வேண்டாம்
  • நீங்கள் வெளியில் செல்லும்போது உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்
  • நீங்கள் வெளியே இருக்கும்போது உங்கள் சுற்றுப்புறங்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்தே இருங்கள்
  • மக்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தைக் கடைப்பிடியுங்கள்
  • வண்டிச் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் பயண விவரங்களைப் பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
  • காலை 6 மணிக்கு மேல் நடைபயணத்திற்குச் செல்லுங்கள்.
  • அதிகபட்சமாக இரவு 8.00 மணி வரை மட்டும் பிரதான சாலைகளைப் பயன்படுத்துங்கள்.
  • வெற்று வீதிகளைத் தவிர்க்கவும். உங்கள் வாகனங்களில் எந்த மதிப்புமிக்க பொருள்ளையும் விட வேண்டாம்.
  • இது குறைந்தது மூன்று மாதங்களாவது அல்லது ஒட்டுமொத்த நிலைமை மேம்படும் வரை பின்பற்றப்பட வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.