கரோனை வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் கட்டுபாடுகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதனால் பிறக் கூலித் தொழிலாளர்கள் வேலையில்லாமல் வாழ்வாதாரம் இழந்தனர் உணவிற்காக அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதேபோல உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 22க்கும் மேற்பட்டோர் சென்னை செம்மஞ்சேரி பகுதியில் வாடகைக்கு தங்கி கட்டடத் தொழில் செய்துவந்தனர். அவர்கள் ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் இழந்தனர். அதனால் அவர்கள் அனைவரும் சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்து செம்மஞ்சேரியில் இருந்து கிளம்பி தாம்பரம் வரை சென்றனர்.
அப்போது அங்கு வாகன தணிக்கையில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி தாம்பரம் காவல் உதவி ஆணையர் அசோகனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்த காவல் உதவி ஆணையர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உணவு ஏற்பாடு செய்தார். அதையடுத்து அவர்களை மீண்டும் வாகனத்தில் செம்மஞ்சேரிக்கு அனுப்பி வைத்தார். தற்போது அவர்களுக்கு அங்கு உணவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைபயும் படிங்க: கண்டெய்னரில் சொந்த ஊருக்கு திரும்ப முயன்ற 26 வட மாநில இளைஞர்கள்!