5:46 PM
'தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம்' ஆண்டு தோறும் ரூ.32 லட்சம் செலவில் கொண்டாடப்படும்.
5:45 PM
சொல்லாய்வுகள், ஆய்வுக் கட்டுரைகள், கருத்தரங்குகள் தொடர்பான செய்திகளை ஆவணப்படுத்தி செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட சாமானிய இயக்குநரை இதழ் ஆசிரியராக கொண்டு சொல் வயல் என்ற பெயரில் மாத இதழ் வண்ணப்படங்களுடன் எழுதுபொருள் அச்சுத் துறை மூலம் வெளியிடப்படும்.
5:43 PM
தொழில் முறை தொடர்பாகவும் பேச்சு வழக்கு தொடர்பாகவும் தமிழ் மொழியில் வழங்கும் மரபுத்தொடர்கள் தொகுத்து 300 பக்கங்களில் தமிழ் மரபுத்தொடர் அகராதி மூன்று ஆண்டு காலத்திற்குள் வெளியிடப்படும்.
5:42 PM
வாரணாசி இந்து பல்கலைக் கழகத்தில் தமிழை இரண்டாம் முறையாக கற்கும் இளநிலை முதுநிலை பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுதோறும் வழங்கப்படும். இதற்கான தொடர் செலவினமாக ரூ.1.85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
5:41 PM
வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் அயல் மொழியினருக்கு எளிதாகவும் விரைவாகவும் தமிழ் கற்பிக்கும் வகையில் மொழி ஆய்வுக் கூடம் தொடங்கப்படும். இதற்கான தொடர் செலவினமாக ரூ.9.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
5:40 PM
தமிழ் வேர்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல், தனித்தமிழ் உள்ளிட்ட பணிகளில் பணியாற்றும் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் பெயரில் விருது தொகையாக ரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தகுதிச்சான்று அளிக்க ரூ.1.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
5:38 PM
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பெயரில் புதிய விருது தொகையாக ரூ.1 லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தகுதிச்சான்று பொன்னாடையும் வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.1.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
5:37 PM
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
5:36 PM
முதிர்ச்சியடைந்த பசுவிற்கு செயற்கை முறையில் இனப்பெருக்கம் - சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
5:06 PM
அஞ்சல் தேர்வு ரத்து செய்யப்பட்டது திமுக எம்.பி.க்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி என எஸ்.பி. வேலுமணி பேசினார்.
4:31 PM
பிற்பகல் நேர சட்டப்பேரவை தொடங்கியது.