தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது பேசிய திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தன் தொகுதியில் உள்ள மேலமாங்காவனம் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையமும் உரக்கிடங்கும் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் காமராஜ், தமிழ்நாட்டில் 1,866 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் நான்கு லட்சத்து 28 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், நெல் வளர்ச்சித் தேவையைக் கருத்தில்கொண்டு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும், உரக்கிடங்கு அமைப்பது பற்றி கூட்டுறவுத் துறை அமைச்சரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.