ETV Bharat / state

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் கருத்துக் கேட்பதா? - ஸ்டாலின் கண்டனம் - புதிய கல்விக் கொள்கை

சென்னை: புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்க முனைவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் கண்டனம்
ஸ்டாலின் கண்டனம்
author img

By

Published : Sep 5, 2020, 4:45 PM IST

நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ள நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து அங்கு விவாதிக்கப்படும் முன்பு செப்டம்பர் 7ஆம் தேதி ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளன.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்வியாளர்கள், கல்வி ஆர்வலர்கள், ஆசிரியர் சங்கம், மாணவர் சங்க சார்பாளர்களின்றி அதிமுக அரசு அமைத்துள்ள குழு தந்திரமாகத் தப்பித்துக்கொள்ள அமைத்துள்ள கண்துடைப்புக் குழு. புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துக் கேட்கும் குழுவில், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளையும், புதிய கல்விக் கொள்கையின் மறுபக்க அம்சங்களைக் கூறி வரும் முன்னாள் துணை வேந்தர்களையும் சேர்க்க வேண்டும்.

நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ள நிலையில், அங்கே புதிய கல்விக் கொள்கை பற்றி விவாதங்கள் இடம்பெறும் வரை பொறுத்திருக்காமல், அவசரம் அவசரமாக, செப்டம்பர் 7ஆம் தேதி ஆளுநர்கள் மாநாட்டைக் கூட்டி, புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து குடியரசுத் தலைவரும், பிரதமர் நரேந்திர மோடியும், கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும், ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்க முனைவது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல் என்பதால், அது ஏற்புடையதல்ல.

புதிய தேசிய கல்விக் கொள்கை வெளியிடுவதற்கு முன், மாநிலக் கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் மத்திய ஆலோசனை வாரியம் (Central Advisory Board of Education) என்ற அமைப்பின் கூட்டத்தில், பாஜக அரசாங்கம் இதுகுறித்து விவாதிக்கவில்லை. இந்நிலையில், மத்திய அரசின் பிரதிநிதிகளாக மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்களிடம் கருத்துக்கேட்பது என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மறுதலிப்பதும், நாடாளுமன்றத்தின் பரிணாமங்களை குறைப்பதும் ஆகும்.

நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து அங்கு விவாதிக்கப்படும் முன்பு, ஆளுநர்களிடம் கருத்துக் கேட்கும் முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி கைவிட வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.