கனரக வாகன தயாரிப்பில் நாட்டிலேயே முன்னணியில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம், பேருந்து தயாரிப்பில் உலக அளவில் நான்காவது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் உள்ளது. இந்நிறுவனம் அண்மையில் பல்வேறு மாநில போக்குவரத்துக் கழகங்களிடமிருந்து பேருந்து தயாரிப்பதற்கான உரிமத்தைப் பெற்றது.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 1,750 பேருந்துகள் தயாரிக்கும் உரிமத்தை அந்நிறுவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை இயக்க அலுவலர் அனூஜ் கத்தாரியா, " அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் பேருந்து தயாரிப்பில் அசோக் லேலண்ட் தொடர்ந்து முன்னணியில் உள்ளது" என்றார் .
இதுதொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவின் தலைவர் சஞ்சய் சரஸ்வத், ”தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் , நாங்கள் தாயரிக்கும் பேருந்துகளை வாங்குவதன் மூலம் இந்த பேருந்துகளின் நம்பகத்தன்மை, தரம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறைந்த விலையில் நிறைந்த சேவை வழங்குவதால் ஏராளமான அரசு போக்குவரத்து கழகங்கள் அசோக் லேலாண்ட் நிறுவனம் தயாரிக்கும் பேருந்துக்லை விரும்புகின்றன” என்றார்.
இதையும் படிங்க : மனைவிக்கு உதவியாக பாத்திரம் தூய்மைப்படுத்தும் பில்கேட்ஸ்!