ETV Bharat / state

எப்போதும்போல் ரத்ததானம் செய்யலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Chennai Government Camp blood donate

சென்னை: பொதுமக்கள் எப்பொழுதும் போல் ரத்ததானம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அனைவரும் எப்பொழுதும் போல் ரத்ததானம் செய்யலாம்

author img

By

Published : Apr 24, 2020, 6:40 PM IST

தமிழ்நாட்டில் வழக்கம்போல் அரசு நடத்தும் முகாம்களில் ரத்ததானம் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு மாநில ரத்த பரிமாற்று குழுமம் இணைந்து 90 அரசு ரத்த வங்கிகளை நிர்வகித்து வருகின்றன. இந்த 90 அரசு ரத்த வங்கிகள் மூலம் சுமார் 4 லட்சம் ரத்த அலகுகள், ஒவ்வொரு ஆண்டும் தன்னார்வ ரத்த தானம் செய்பவர்களிடமிருந்து சேகரிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் சராசரியாக சுமார் 33,000 ரத்த அலகுகள் ஒவ்வொரு மாதமும் தேவைப்படுகின்றன. கோவிட்-19 தொடர்பான விதிமுறைகள் காரணமாக, சாலை விபத்து, அவசரகால சிகிச்சைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் குறைந்து இருப்பதால் ரத்த அலகுகளின் தேவை குறைந்துள்ளது.

ஆனால் தலசீமியா நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் ரத்தமாற்றம் தேவைப்படக்கூடிய மோசமான நோயாளிகளுக்கு ரத்த பரிமாற்றம் செய்ய ஒவ்வொரு ரத்த வங்கியும் வழக்கமான தேவையில் 25 சதவீதம் ரத்த அலகுகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். ஆகவே மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ‘கோவிட் 19-இன் போது அத்தியாவசிய சேவைகள்’ குறித்த மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதலின்படி ரத்த வங்கியின் சேவைகளை செயல்பட அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசும் பொதுமக்கள் அனைவரும் எப்பொழுதும் போல் ரத்ததானம் செய்யலாம்" என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: நாட்டுப் படகுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் மீன்பிடிக்க அனுமதி - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.