ETV Bharat / state

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை!

HC question on result announcement of arrears exam

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை

author img

By

Published : Dec 1, 2020, 4:05 PM IST

Updated : Dec 1, 2020, 5:42 PM IST

15:59 December 01

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக, தேர்வுகள் நடத்தாமல் பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட பொது ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால், இறுதி பருவத்தேர்வு தவிர பிற தேர்வுகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்களும் தேர்ச்சி பெற்றதாக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதுதொடர்பான வழக்குகளுக்குப் பதிலளித்த பல்கலைக்கழக மானியக்குழுவும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலும், அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிகளுக்கு முரணானது என்று தெரிவித்திருந்தது. அரியர் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும், மாணவர்களின் நலன் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சில பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்தாமல், அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருவதாகக்கூறி, அதற்குத் தடை விதிக்க வேண்டும் என, ராம்குமார் ஆதித்தன் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(டிச.1) விசாரணைக்கு வந்தது.

அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக, தேர்வு நடத்தாமல் எப்படி முடிவுகளை வெளியிடலாம்? என கேள்வி எழுப்பி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆன்லைன் மூலமாகவோ, ஆப்-லைன் மூலமாகவோ பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்தலாம் என யோசனை தெரிவித்த நீதிபதிகள், அரியர் தேர்வுகளையும் ரத்து செய்யும்படி பல்கலைகழகங்களை அரசாணை மூலம் எப்படி கட்டயப்படுத்த முடியும் என, தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், 30 சதவீத மக்கள் மட்டுமே முகக்கவசம் அணிவதாக தலைமைச் செயலாளர் கூறியுள்ள நிலையில், மக்களை பாதுகாப்பதற்காக தேர்வுகளை ரத்து செய்வதாக எப்படி கூற முடியும் எனவும் கேள்வி எழுப்பினர். 

அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையின் போது, மாணவர்கள் காணொலி காட்சி விசாரணையில் நுழைந்து, இடையூறு ஏற்படுத்தியதையும், நீதிமன்ற விசாரணையை யூடியூப்பில் ஒளிபரப்பியதற்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இதனால் இந்த அனைத்து வழக்குகளின் விசாரணையும் நேரடி விசாரணையாக நடத்தப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: வாகனங்களுக்கு எஃப்.சி: தனியார் நிறுவனங்கள் மூலம் மெகா வசூல் -முக ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Last Updated : Dec 1, 2020, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.