ETV Bharat / state

சென்னையில் 2 ஆண்டுகளில் இ-டாக்சி.. வீட்டின் மொட்டை மாடிக்கு வரும் இ-பிளேன்.. சென்னை ஐஐடி மும்முரம்.. - Chennai passengers can avail Air Taxi service

சென்னை ஐஐடியின் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங்துறை மாணவர்கள் உருவாக்கி வரும் சிறிய ரக விமானம் மூலம் வருங்காலத்தில் இ-டாக்சியில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஏர் டாக்ஸியில் பயணிக்க ஆர்வமா? 2025இல் தயாராகுங்கள்"... சோதனை முடிவில் சென்னை ஐஐடி!

author img

By

Published : Feb 21, 2023, 8:59 PM IST

Updated : Feb 22, 2023, 6:35 AM IST

சென்னையில் 2 ஆண்டுகளில் இ-டாக்சி.. சென்னை ஐஐடி மும்முரம்..

சென்னை உள்ளிட்ட நெரிசல் மிகுந்த நகரங்களில் எளிதாக பயணம் செய்யும் வகையில், சென்னை ஐஐடியின் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் துறையினர் தயாரித்து வரும் சிறிய ரக விமானம் 5 பேர் வரையில் செல்ல ஏதுவாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் சோதனை ஓட்டம் விரைவில் சென்னை தையூரில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடைபெறுகிறது. 2023ஆம் ஆண்டில் இறுதியில் சரக்குகளை வேகமாக கொண்டு செல்வதற்கும், 2024ஆம் ஆண்டு இறுதியிலோ அல்லது 2025ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ சிறிய ரக விமானத்தின் மூலம் மனிதர்கள் பயணம் செய்வதற்கும் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

"ஏர் டாக்ஸியில் பயணிக்க ஆர்வமா? 2025இல் தயாராகுங்கள்"... சோதனை முடிவில் சென்னை ஐஐடி!

அதற்காக வான்வெளித்துறையில் தனியாக கொள்கைகளை உருவாக்க வேண்டும். இந்த விமானம் மின்சார பேட்டரியில் இயக்கப்பட உள்ளதால் குறைந்த கட்டணத்தில் மக்கள் பயணிக்க முடியும் என்று சென்னை ஐஐடியின் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். சிறிய ரக எலக்ட்ரிக் விமானங்களை உருவாக்கும் பணியில் சென்னை ஐஐடி பேராசிரியர் சத்யா சக்ரவர்த்தி, அவரது மாணவர் பிரஞ்சல் மேத்தா இணைந்து e-Plane எனும் நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் முக்கிய நோக்கம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல் விரைவாக வான் வழி மூலம் காரில் செல்வது போல் பயணம் செய்வதை கொண்டதாகும். இப்போது ஐஐடி தயாரித்துள்ள சிறிய ரக விமானத்தில் 5 பேர் பயணிக்க முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர் செல்ல முடியும். இந்த விமானத்தின் சோதனைக்கு பின்னர் முதலில் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு 2023ஆம் ஆண்டின் இறுதியில் பயன்படுத்தப்பட உள்ளது.

இ-பிளேன் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்காக, சென்னை ஐஐடியின் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் சக்ரவர்த்தி சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சென்னை ஐஐடியில் இ-பிளேன் டாக்சியை தயாரித்து வருகிறோம். சாதாரணமாக டாக்சியை மொபைல் ஆப் மூலம் அழைத்தால், நம்மை ஏற்றிக் கொண்டு சேர வேண்டிய இடத்தில் விட்டு விடும். அதேபோல் ஆப் மூலம் இ-பிளேன் டாக்சியை புக் செய்தால், அது வானில் பறந்து வந்து மாடியிலோ, தரையிலோ இறங்கி மீண்டும் வானில் பறந்துச் சென்று தரையிலோ அல்லது வீட்டின் மாடியிலோ இறக்கி விட்டு விடும்.

நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு 1 மணி நேரத்திற்கு பதில் 5 முதல் 10 நிமிடங்களில் செல்ல முடியும். இதற்கான கட்டணமாக நாம் டாக்சிக்கு கொடுப்பதை விட 2 முதல் 3 மடங்கு கூடுதலாக இருக்கும். இபிளேன் வடிமைப்பில் சற்று சிறிய அளவில் தாயர் செய்து வருகிறோம். இதில் தற்பொழுது மனிதர்கள் ஏறி அமர முடியாது. அடுத்தக்கட்டாமாக அதற்கான இன்ஜின், அமரும் இடங்கள் போன்றவற்றை வடிவமைத்து 6 மாதத்தில் சோதனையில் பறப்பதற்கு தயார் செய்து விடுவோம்.

அதனைத் தொடர்ந்து நிறைய சோதனை செய்ய வேண்டி இருக்கும். அதன் பின்னர் தான் அரசாங்கத்தில் பாதுகாப்பானது என சான்றிதழ் அளிப்பார்கள். அதற்கு ஓராண்டு காலம் தேவைப்படும். அதனால் 2024ஆம் இறுதியிலோ அல்லது 2025ஆம் ஆரம்பத்திலோ மனிதர்கள் பயன்படுத்தும் வகையில் வரும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு முன்னர் சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுத்துவதற்கு 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் திட்டமிட்டுள்ளோம்.

அதற்காக சரக்கினை எடுத்துக் செல்லும் நிறுவனங்களுடன் பேசிக்கொண்டு வருகிறோம். இதனை செயல்படுத்துவதற்கு வான்வழித்துறையின் அனுமதியை பெற வேண்டும். முறைப்படி காற்றாடி பறக்கவிடுவதற்கும் அனுமதி பெற வேண்டும். ஆனால், நாம் வாங்குவது இல்லை. வான்வழியில் செல்வதற்கு நெறிமுறைகளை கொண்டு வந்துள்ளனர். 2021ஆம் ஆண்டில் 500 கிலோ எடை வரையில் ட்ரோன் மூலம் கொண்டுச் செல்வதற்கு விதிமுறைகளை கொண்டு வந்துள்ளனர்.

அந்த விதிமுறையின் படி சரக்கு பிளேன் பறக்கவிட முடியும். ஆனால் மனிதர்களை அனுப்புவதற்கு பிளேன் விதிகளின் படித்தான் செயல்படுத்த முடியும். அதற்கான அனுமதி சான்றிதழ் பெற வேண்டும். வான்வழியில் விமானம், ஹெலிக்காப்டர் இரண்டிற்கும் நடுவில் தயார் செய்யப்பட்ட இ பிளேன் பறக்க விடுவதற்கு பல்வேறு நாடுகளில் விதிமுறைகளில் மாற்றங்களை செய்து வருகின்றனர். இபிளேன் ஹெலிகாப்டர் , ட்ரோன் போல் மேலே சென்று விமானம் போல் முன்னோக்கி செல்லும். எனவே இதற்கான ஐரோப்பாவில் கொண்டு வரப்பட்டுள்ள விதிமுறைகளை அடிப்படையாக வைத்து சான்றிதழ் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் இ பிளேன் நகரத்தில் பறக்க வேண்டும். வழித்தடம் சாதாரணமாக பறக்கும் விமானத்தின் உயரத்தைவிட குறைவாகவும், ட்ரோன் பறக்கும் உயரத்தைவிட அதிகமாகவும் இருக்கும். அதிகப்பட்சமாக 1500 முதல் 4000 அடி வரையில் உயரத்தில் பறக்கும் வகையில் வழித்தடம் அமைக்கப்படும். பேட்டரி மூலம் இயங்குவதால் உற்பத்தி செலவும் குறைவாகத்தான் இருக்கும். மேலும் பிளேன், பராமரிப்பு செலவும் குறையும். வெர்டிக்கல் வடிவில் தயார் செய்யப்படும் போது, ஜெர்மனியில் 7 பேர் செல்லும் வகையில் வடிவமைத்து வருகின்றனர்.

இஸ்ரேலில் 9 பேர் செல்லும் வகையில் வடிவமைத்து வருகின்றனர். இது அதிகப்பட்சமாக இருக்கிறது. இ பிளேனில் காரில் அதிகப்பட்சமாக 5 பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்படும். 7 அல்லது 9 பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைத்தால், சீட் காலியாக இருக்கும் போது ஒட்டுவதிலும் சிரமமாக இருக்கும். மேலும் அதிகளவில் பயணிகள் செல்லும் வகையில் வடிவமைத்தாலும் குறிப்பிட்ட இடத்தில் இறக்கவும் முடியாது. அதற்கு அதிகளவில் இடம் தேவைப்படும். எனவே 2 முதல் 5 பேர் வரையில் செல்லும் வகையிலும், ஒரு சார்ஜில் 200 கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்படும். ஆனால் 10 முதல் 20 கிலோ மீட்டர் தூரத்தை எவ்வளவு வேகமாக கடக்க முடியும் என்பது தான் முக்கியமாகும்.

இ பிளேன் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்தப் பகுதியில் இருந்து வேகமாக செல்வதற்கு ஏற்பவும், குறைவான இடத்தில் இறங்கும் வகையில் ரக்கை சிறியதாக வடிவமைப்பதற்கு உள்ள நுணுக்கங்களை பயன்படுத்தி உள்ளோம் . உலகிலேயே மிக குறுகிய அளவிலான ரக்கையை வடிவமைத்து உள்ளோம். மனித உடல் உறுப்புகளை இடம் மாற்றம் செய்வதற்கு 50 முதல் 100 கிலோ எடையில் இ பிளேன் சரக்கு வாகனத்தின் மூலமும் எடுத்துச் செல்லலாம். நீண்ட தூரத்திற்கு எடுத்துச்செல்ல முடியும். 100 கிலோ மீட்டர் வரையில் தடையின்றி எடுத்துச் செல்ல முடியும். தையூர் வளாகத்தில் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து சரக்கு எடுத்துச் செல்வதற்கான இ பிளேன் வடிவமைப்பு முடிவடைந்துள்ளது. மனிதர்கள் செல்வதற்கான இ பிளேன் செப்டம்பரில் மாதிரி தயாரித்து முடிக்கப்படும்.

இதற்கான உதிரிப்பாகங்களை சர்வதேச நாடுகளில் இருந்து வாங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஒரு கட்டத்தில் அனைத்தும் நம் நாட்டிலேயே தயாரித்து பயன்படுத்தப்படும் என தெரிவித்தார். இந்த சிறிய ரக விமானம் பேட்டரியால் இயங்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும். இதற்குப் பிறகு மீண்டும் 15 நிமிடம் சார்ஜ் போட வேண்டும் எனத் தெரித்தார்.

இதையும் படிங்க:"மாணவர்களுக்கு துணையாக திமுக நிற்கும்" - உதயநிதி ஸ்டாலின்

Last Updated : Feb 22, 2023, 6:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.