ETV Bharat / state

’தமிழ்நாட்டில் 6 இடங்களில் சைவ, வைணவ அர்ச்சகர் பயிற்சி மையங்கள்’ - இந்து சமய அறநிலையத்துறை - முக்கிய செய்திகள்

மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி நிலையங்களும், சென்னை, ஸ்ரீரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி இடங்களும் ஏற்படுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

author img

By

Published : Sep 4, 2021, 3:06 PM IST

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்.04) நடைபெற்று வருகிறது. அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில், இந்து அறநிலையத் துறையில் சமூக நீதியை நிலைநாட்டும் விதத்தில் அனைத்துப் பிரிவுகளிலும் தகுதியான தேவையான பயிற்சி பெற்றவரை அர்ச்சகர்களாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி நிலையங்களும், சென்னை, ஸ்ரீரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி இடங்களும் ஏற்படுத்தப்பட்டு அர்ச்சகராக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 56 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை முன்னதாக வழங்கினார். இந்நிலையில், அவர்களில் 22 நபர்கள் அர்ச்சகர்கள் பயிற்சி நிலையங்களில் பயிற்சி நிறைவு செய்தவர்கள் என்று இந்து சமய அறநிலையத் துறை கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரி ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.