ETV Bharat / state

"அதிமுக ஆட்சியில் ஊழல் செய்தவர் திமுக அமைச்சரின் பிஏ" - அறப்போர் இயக்கம் பகீர் புகார் - திமுக அமைச்சரின் சிறப்பு உதவியாளரா

Arappor Iyakkam: அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் லட்சணம் இது தானா? என அறப்போர் இயக்கம் பகிரங்கமாக கேள்வி எழுப்பி உள்ளது.

admk-road-scam-person-currently-work-in-dmk-minister-pa

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 10:37 PM IST

சென்னை: அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் லட்சணம் இது தானா? என அறப்போர் இயக்கம் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பி உள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறையில் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ரூ.750 கோடி பிட் மண் ஊழல் முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர் தற்போது திமுக அமைச்சர் ஏ.வ. வேலுவின் சிறப்பு உதவியாளராக உள்ளார். மேலும் ஊழல் குற்றச்சாட்டில் உள்ள திமுக அமைச்சரின் சிறப்பு உதவியாளர் ஜெயசேகர் மற்றும் 1130 அதிகாரிகள் மீது உடனடி துறை நடவடிக்கை வேண்டி அறப்போர் இயக்கம் தலைமைச் செயலர் உள்பட அனைவருக்கும் புகார் அனுப்பி உள்ளது.

இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெற இருக்கும் திமுக அமைச்சரின் சிறப்பு உதவியாளர் ஜெயசேகர் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர், ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் இயக்குநருக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: வேகத்தடை அமைப்பதில் ஊழலா? - ஆர்.டி.ஐ. தகவலால் எழும் குற்றச்சாட்டு

மேலும் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு துறையில் பாதிப்பேர் ஊழல் வாதி என்ற நிலையில் பார்த்தோம். 2014 - 2016ஆம் ஆண்டில் சாலை பணிக்காக 610 கோடிக்கு பணிகள் ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. அப்போது ஒரு பொருள் 40 ஆயிரத்திற்கு விற்றது. ஆனால் சாலை அமைக்கும் நேரத்தில் அந்தப் பொருள் விற்கும் விலைக்கு பணம் அளித்தால் போதுமானது என கூறப்பட்டது.

  • 1130 அரசு ஊழியர்கள் செய்த ஊழல். இந்த ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் இன்று அரசாங்க உயர் பதவியில் அதிகாரங்களுடன் இருக்கிறார்கள். அதில் ஒருவர் திமுக அமைச்சர் வேலு அவர்களுக்கு PAவாக இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அவர் ஓய்வும் பெற போகிறார்.

    அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது… pic.twitter.com/rnGmvyM84W

    — Arappor Iyakkam (@Arappor) August 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சாலை அமைக்கும் போது 30 ஆயிரத்திற்கு விலை குறைந்து விட்டது. விலையைக் குறைத்து அளிக்காமல் முழுத் தாெகையையும் அளித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் போது பிட் மண் அடிப்பதிலும் ஊழல் செய்துள்ளனர். அமைச்சர் ஏவ வேலுவின் உதவியாளர் ஆகஸ்ட் 31ஆம் தேதி பணி ஒய்வுபெற உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: "பாஜக ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் பல லட்சம் கோடி ஊழல்" - கே.பாலகிருஷ்ணன் பகீர் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.