ETV Bharat / state

அரசு மருத்துவமனைகளில் கோடிக்கணக்கில் ஊழல்; ஆதாரத்தை வெளியிட்டது அறப்போர் இயக்கம் - பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி

சென்னை: கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள 70 மருத்துவமனைகளில் 50 முதல் 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளது என அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

Arappor iyakkam
author img

By

Published : May 18, 2019, 9:49 AM IST

அரசு மருத்துவமனைகளில் பணியாளர்களை குறைவாக பணி அமர்த்திவிட்டு, அதிகமான ஊழியர்கள் வேலை செய்வதுபோல் போலியான கணக்குக் காட்டி பணத்தைக் கொள்ளை அடித்துவருவது அம்பலமாகியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள 70 மருத்துவமனைகளில் 50 முதல் 100 கோடி ரூபாய்வரை ஊழல் நடைபெற்றுள்ளது என அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

அறப்போர் இயக்கம்

அரசு மருத்துவமனைகளில் துப்புரவு, பாதுகாப்பாளர் வேலைகளை தனியார் நிறுவனமான பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி என்ற நிறுவனத்திற்கு விதிகளை மீறி டெண்டர் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிறுவனம், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவின் நெருங்கிய உறவினரின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு மருத்துவமனைகளில் நடக்கும் இந்த ஊழல், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் துணையோடு நடைபெற்றுவருகிறது. இதற்கு மேலாவது லஞ்ச ஒழிப்புத்துறை விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலுக்கு உடந்தையாக இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 17.05.19

கடந்த மூன்று ஆண்டுகளில் 70 அரசு  மருத்துவமனைகளில் தமிழகத்தில் 400 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இதனால் பல கோடி ஊழலில் பத்மாவதி நிறுவனம் ஈடுபடுள்ளது.. அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு..

அறப்போர் இயக்கத்தின் நிர்வாகிகள் ஜெய்ராம் வெங்கடேசன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தனர் அப்போது, 
சுகாதாரத்துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் ஹாஸ்பிடாலிடி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள டெண்டரில் 400 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லை. முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவின் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். 

புளூ ஓசோன் நிறுவனம் ராமமோகன் ராவின் மகனுக்கு சொந்தமானது. எனவே சம்மந்தப்பட்ட டெண்டர் அவரது மகன் எடுத்துள்ளார். மேலும் அவரது சகோதரர் பத்மாவதி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்துள்ளார். கடைசி நேரத்தில் விதிகள் மாற்றப்பட்ட ஆதரத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளோம். பத்மாவதி நிறுவனத்தில் அரசு மருத்துவமனைகளில் குறைந்த ஆட்களை துப்பரவு பணியாளர்களை நியமித்து அதிகம் பேர் வேலை செய்வதாக கணக்குக் காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகள் எடுக்க மறுக்கிறது. ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் இரண்டு வருகைப்பதிவு கையாளப்படுகிறது. ஒன்று உண்மையில் பணிக்கு வந்தவர்கள்.. மற்றொன்று அதிகப்படியான பணியாளர்கள் வந்ததாக பொய்யாக தயாரிக்கப்பட்ட வருகைப் பதிவு ஆவண நோட்கள் என பயன்படுத்துகின்றனர். 

உலகில் மருத்துவ கழிவுகளின் பாதிப்புகளால்தான் அதிக உயிர் இழப்புகள் ஏற்படும் நிலையில் மருத்துவமனைகளில் துப்பரவு பணியாளர்கள் குறைவால் நோய் தொற்று அதிகரித்து பொதுமக்கள் உயிரிழக்க வாய்பாக அமைகிறது.. 

67 பேர் வந்ததாக ஒரு வருகை பதிவும், 91 பேர் பணிக்கு வந்ததாக ஒரு வருகைப்பதிவு என பலதரப்பட்ட ஊழல்களில் இந்த நிறுவனம் அரசு மருத்துவ மனைகளில் ஊழல் செய்துள்ளனர். 

இதனால், மாதக்கடைசியில் சம்பளம் போட வேண்டும் என்கிற விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால், அரசு மருத்துவமனையை ஏமாற்ற வேறொரு கணக்கு காட்டப்பட்டு பல லட்சம் ரூபாய் என ஒரு மாதத்தில் மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமான தொகை இழப்பு மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஏற்படுகிறது. 
கடந்த மூன்று ஆண்டுகளில் 70 மருத்துவமனைகளில் தமிழகத்தில் மோசடி செய்துள்ளனர். இதனால் பல கோடி ஊழலில் பத்மாவதி நிறுவனம் ஈடுபடுள்ளது..

எந்தப்பணியாளருக்கும் சம்பளச் சீட்டு கொடுக்கப்படுவதில்லை. பி.எப் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆதருடன் லின்க் செய்யாமல் ஏமாற்றியுள்ளனர். 
பணியாளர்களுக்கு பணி சுமையும் இதனால் அதிகரிக்கிறது. சுகாதாரத்திற்கான பொருட்கள் வாங்கியதிலும் ஊழல்ன்செய்துள்ளதால், அரசு மருத்துவமனையில் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தப்புகார் தொடர்பாக தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை.. மீண்டும் இதே நிறுவனத்திற்கு டெண்டர் விடவும் ஏற்பாடுகள் நடக்கிறது. மேற்படி புகார்களுக்கு அனைத்து ஆதாரங்களும் இருப்பதால் உடனடியாக இந்நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.. மேலும் சுகாதாரத்துறையில் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்ட பத்மாவதி ஹாஸ்பிடாலிடி நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.. 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.