சென்னை: தமிழ்நாடு ஏற்கெனவே கலைகளில் சிறந்து விளங்கி வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காகிதத்தில் கலைத்திறன் வடிப்பது குறித்த பயிற்சி அளிக்க டெல்லியைச் சேர்ந்த உமேஷ் ராய், புரன் லால் ஆகிய இருவர் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு வந்து மாணவர்களுக்கு காகித கலைத் திறன் குறித்து பயிற்சியை அளிப்பார்கள். இந்த இருவருக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.
பள்ளிகல்வித்துறை ஆணையரின் இந்த உத்தரவு, ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலை பண்பாட்டில் முன்னோடி மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் தெரியாத இந்தி பேசக் கூடிய இருவரை, கலைத்திறன் தொடர்பாக பயிற்சி அளிக்க நியமனம் செய்வது எந்த வகையில் நியாயமாகும் என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘பள்ளிக்கூடம் போறோம்... கூடுதல் பஸ் விடுங்க...’ - அரசு பேருந்தை சிறை பிடித்த பள்ளி மாணவர்கள்