சென்னை: அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கடந்த மானியக் கோரிக்கையின் போது, சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூ.1.50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 13 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 20 வயதிற்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் சேர்க்கை படிவங்களை திருக்கோயில் அலுவலகத்திலும், www.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்,
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,
மயிலாப்பூர்,
சென்னை-600004.
ஜனவரி 15ஆம் தேதி விண்ணப்பங்களுக்கு கடைசி நாள். இந்த சைவ வேத ஆகம பகுதி நேர பாடசாலையில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணபித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Competitive examination: அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி