ETV Bharat / state

டாஸ்மாக்கில் ஊழல் புகார் - பாஜக ஐடி பிரிவு தலைவர் விசாரணைக்கு ஆஜர்

தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் பார்களில் ஊழல் நடப்பதாக பாஜக ஐடி பிரிவு தலைவர் கொடுத்தப் புகாரில் அது குறித்த விசாரணைக்கு லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஆஜரானார்.

டாஸ்மாக்கில் ஊழல் நடப்பதாக பாஜக ஐடி பிரிவு கொடுத்த புகாரில் விசாரணைக்கு ஆஜர்

author img

By

Published : Nov 10, 2022, 11:13 PM IST

சென்னை: ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கடந்த 29ஆம் தேதியன்று புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், ’தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களில் ஊழல் நடப்பதாகவும், திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் மது விற்பனை பள்ளிக்குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரிடமும் சகஜமாக புழங்கத் துவங்கியுள்ளது. இதில் பல முறைகேடுகள் நடப்பதும் தெரியவந்தது.

டாஸ்மாக் கடைகளில் 10% வரை எம்.ஆர்.பி.யில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 130 கோடி வரை மது தமிழகத்தில் விற்பனையாகும் நிலையில் 10% கூடுதல் விலை என்பது 13 கோடி வரை கணக்கில் வராத கறுப்புப் பணமாக தரப்படுகிறது.

சட்டப்படி பார்களில் மது விற்பனை செய்யக்கூடாது, ஆனால் தமிழகத்தில் உள்ள 3000க்கும் அதிகமான பார்களில் 24 மணி நேரமும் 60% எம்.ஆர்.பி.விலைக்கு கூடுதலாக விற்கப்படுகிறது. மதுபான பார்களில் சட்டவிரோத மது விற்பனையில் 3000 பார்களில் சுமார் 30 கோடிக்கு மேல் தினமும் கணக்கில் வராத கறுப்புப் பணமாக தரப்படுவதாகவும்’ புகார் அளித்திருந்தார்.

அது தொடர்பாக விசாரணைக்கு இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகி அது குறித்து விசாரணை அதிகாரியிடம் விளக்கம் அளித்தார். பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், விசாரணை முழு திருப்தி அளிப்பதாகவும், இரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றத்தில் முறையிடப்போவதாகவும் கூறினார்.

டாஸ்மாக்கில் ஊழல் புகார் - பாஜக ஐடி பிரிவு தலைவர் விசாரணைக்கு ஆஜர்

’டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை நடப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 130 கோடி ரூபாய் வருவாயில் 10% எம்.ஆர்.பியை விட அதிகம் சம்பாதிக்கின்றனர். அதேபோல் மதுபான பார்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து பல கோடி வருவாய் ஈட்டுகின்றனர்.

இந்த வருமானம் முழுவதையும் கரூர் கம்பெனி ஒன்று 1000 ஏஜெண்டுகளை வைத்து வசூல் செய்கின்றனர். இந்த ஊழல் முறைகேடுகள் அமைச்சருக்கு தெரியாமல் எப்படி நடக்கும்’ என கேள்வி எழுப்பினார். மேலும், ‘கரூர் கம்பெனி அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது தம்பி அசோக்கிற்கு தெரியாமல் நடக்காது’ என்றார்.

இதையும் படிங்க: ஆளுநரை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் - எச்சரித்த சுப.வீ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.