ETV Bharat / state

ரூ.15 கோடி மதிப்பிலான திருமால் சிலை மீட்பு!

கர்நாடக மாநிலத்தில் கோவிலில் இருந்து திருடப்பட்ட திருமால் சிலையை, பேரம் பேசுவது போல நடித்து வழக்கறிஞரிடம் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.

ரூ.15 கோடி மதிப்பிலான பாலாஜி சிலை மீட்பு!

author img

By

Published : Nov 9, 2022, 12:29 PM IST

Updated : Nov 9, 2022, 1:19 PM IST

சென்னை: கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு கோவிலில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமால் சிலையை பூசாரி ஒருவர் திருடி கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஒரு வழக்கறிஞருக்கு விற்பனை செய்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக சட்டவிரோதமாக சிலைகளை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிவதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலை வாங்குபவர்கள் போல நடிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவிநாசி சாலையில் உள்ள ஒரு காபி ஷாப்பில் தரகர் ஒருவர் மாறுவேடத்தில் இருந்த போலீசாரை அணுகி, 600 ஆண்டுகள் பழமையான திருமால் சிலை ஒன்று இருப்பதாகவும், அதன் விலை ரூ.33 கோடி எனவும் அந்த சிலை தனது நண்பர் வழக்கறிஞர் பழனிசாமியிடம் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த சிலையை வாங்குவதாக போலீசார் ஒப்புக் கொண்ட பின்னர், அந்த சிலையை காண்பிப்பதற்காக வழக்கறிஞர் பழனிசாமி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது வழக்கறிஞர் பழனிசாமியிடம் ரூ.15 கோடிக்கு சிலைகளை வாங்கிக் கொள்வதாக பேரம் பேசி உறுதி அளித்துள்ளனர்.

இதை நம்பிய பழனிச்சாமி மறுநாள் சிலையை ரூ.15 கோடி விற்க கொண்டு வரும்போது, மறைந்திருந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பழனிச்சாமியை சுற்றி வளைத்து பாலாஜி சிலையை மீட்டனர்.

பிடிபட்ட வழக்கறிஞர் பழனிச்சாமியிடம் சிலைக்குண்டான முறையான ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வழக்கறிஞர் பழனிச்சாமி நடராஜன் என்பவரிடம் ஜூனியர் ஆக பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.

நடராஜனுக்கு கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு கோவில் பூசாரியை நன்கு தெரியும் எனவும் அவரிடமிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு நடராஜன், திருமால் சிலையை வாங்கியதாக தெரிவித்துள்ளார். பின்னர் சிலையை காரில் கொண்டு வரும்போது நடராஜன் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டு திருட்டு வழக்கில் சிறையில் அடைத்தனர்.

பின்னர் சிலைக்கான பொய்யான சான்றிதழை தயார் செய்த நடராஜன் அதை கொடுத்துவிட்டு வழக்கிலிருந்து தப்பி விட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பாலாஜி சிலையை ரூ.50 கோடிக்கு விற்பதாக நடராஜன் பலரிடம் தெரிவித்தும், விலை அதிகம் என்பதால் யாரும் வாங்க முன்வரவில்லை என தெரிகிறது.

இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு சிலையை அவரது ஜூனியர் வழக்கறிஞர் பழனிச்சாமிடம் விற்று தருமாறு கொடுத்துவிட்டு, நடராஜன் இறந்து விட்டதாக விசாரணையில் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதன் பின்பு பழனிசாமி சிலையின் மதிப்பை குறைத்து, தரகர்கள் மூலமாக விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், இந்த நிலையில் தான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாறுவேடத்தில் வந்து ரூ.15 கோடி பேரம் பேசிய போது சிலைகளை விற்க முடிவு செய்ததாக வழக்கறிஞர் பழனிச்சாமி விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலை எந்த கோவிலில் சேர்ந்தது என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:டெல்லி, நேபாளத்தில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி!

Last Updated : Nov 9, 2022, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.