ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன பேரணி - குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன பேரணி நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்ப்பு போராட்டம்

author img

By

Published : Feb 20, 2020, 8:12 AM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன பேரணி நடைபெற்றது.

anti caa protest in chennai
பேரணியில் கலந்து கொண்ட அரசியல் கட்சி தலைவர்கள்

முன்னதாக, தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வாலாஜா சாலையில் கலைவாணர் அரங்கம் முன்பு தொடங்கிய கண்டன பேரணி சேப்பாக்கம் மைதானத்தின் முன் நிறைவுபெற்றது. இந்தப் பேரணியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு ஆதரவாகச் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அபூபக்கர், தமிமுன் அன்சாரி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரின்ஸ் ஆகியோர் பேரணியில் கலந்துகொண்டனர்.

இந்தப் பேரணிக்கு திமுக சார்பாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கனகராஜ் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆதரவளித்தனர்.

anti caa protest in chennai
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்ட இஸ்லாமிய அமைப்பினர்

இதற்காக, தலைமைச் செயலகம் முதல் பேரணி நடைபெற்ற வாலாஜா சாலை வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சுமார் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லா பறக்கும் குட்டி விமானம் மூலமும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழ்நாட்டில் எந்த இஸ்லாமிய பாதிக்கப்பட்டார் என சுட்டிக்காட்டுங்கள், அதற்குப் பதிலளிக்கிறோம் என நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய வன்னி அரசு, ஊருக்குள் பாம்பு நுழைந்து விட்டால் அதனை அடிப்பீர்களா அல்லது பாம்பால் பாதிப்பு ஏற்படுமா எனக் கேள்வி கேட்பீர்களா என்று கேள்வியெழுப்பினார்.

பதாகை ஏந்தி போராட்டம்
பதாகை ஏந்தி போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் அபூபக்கர் கூறினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், ”குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றோம். அப்பொழுது புதிய மக்கள்தொகை பதிவேட்டில் பிறப்புச் சான்றிதழ் கேட்கப்பட்டுள்ளது எனக் கூறினேன். அதற்கு முதலமைச்சர் அப்படியா பிறப்புச் சான்றிதழ் கேட்கப்படுகிறதா எனச் சந்தேகத்துடன் கேட்டார். பின் தனக்கும் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்று கூறினார். அப்படியானால் எடப்பாடி பழனிசாமி சந்தேகத்துக்குரிய குடிமகன் அவருக்கும் சேர்த்துதான் போராடுகிறோம்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்

அதைப்போல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை என முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் இந்தச் சட்டத்தால் ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார். போராட்டம் நிறைவடைந்த பின்பு அங்கிருந்து தன்னார்வலர்கள் குப்பைகளைச் சுத்தம் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் பார்க்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நூதன போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.