ETV Bharat / state

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியீடு!

சென்னை: அறநிலையத்துறை பணியிடத்திற்கு இந்து சமயத்தைச் சேர்ந்த விண்ணப்பதார்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

குருப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணையை
author img

By

Published : Jun 14, 2019, 11:49 PM IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணியில் தேர்வு செய்தவற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கிராம நிர்வாக உதவியாளர் (397), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2688), இளநிலை உதவியாளர் (பிணையம்) (104), வரித் தண்டலர் நிலை பணியில் (39), நில அளவர் (509), வரைவாளர் (74), தட்டச்சர் (1901), சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை மூன்று பணியில் (784) பணியிடங்களில் என 6,491 இடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு இணைய வழி மூலம் (14.6.2019) முதல் (14.7.2019) அன்று இரவு 11.59 மணி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் காலிப்பணியிடங்களுக்கு இந்து சமயத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்களில் வகுப்பு, பிரிவுகள், கல்வித்தகுதி, உடற்தகுதி, தகுதிக்கான வயது ஆகியவை முழுமையாக நிரப்பப்படாத விண்ணப்பம், புகைப்படம், குறிப்பிட்ட ஆவணங்கள், கையொப்பம் போன்ற அடிப்படைத் தகுதிகள் குறித்த தவறான தகவல் கொண்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்த பின்னர் திருத்தம் செய்ய முடியாது.

இவர்களுக்கான எழுத்துத் தேர்வு 1.9.2019 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். தேர்வுக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும், தேர்வாணையத்திற்கு செலுத்தப்படும் கட்டணம் எந்த சூழ்நிலையிலும் திருப்பி தரப்படாது. இணைய வழியில் தேர்வுக்கட்டணத்தை செலுத்தாமல் நேரடியாக செலுத்தும் வரைவு காசோலை, அஞ்சலக காசோலை போன்றவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

கலந்தாய்விற்கான நாள், நேரம் குறித்த தகவல்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் எஸ்.எம்.எஸ், இமெயில் ஆகியவற்றின் மூலம் மட்டுமே விண்ணப்பத்தாரர்களுக்கு தெரிவிக்கப்படும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Intro:அறநிலையத்துறைப் பணியிடத்திற்கு
இந்து சமயத்தவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
டி.என்.பி.எஸ்.சி. தகவல் Body:சென்னை,

அறநிலையத்துறைப் பணியிடத்திற்கு
இந்து சமயத்தவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
டி.என்.பி.எஸ்.சி. தகவல்

சென்னை,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 4 பணியில் 6491 தேர்வுச் செய்தவற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிராம நிர்வாக உதவியாளர் 397, இளநிலை உதவியாளர்( பிணையமற்றது) 2688, இளநிலை உதவியாளர் (பிணையம்) 104, வரித் தண்டலர் நிலை 1 பணியில் 39, நில அளவர் 509, வரைவாளர் 74, தட்டச்சர் 1901, சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 பணியில் 784 பணியிடங்களில் 6491 இடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களின் விபரம் தோராயமானதாகும். இந்த பணியிடங்களுக்கு 14.6.2019 முதல் 14.7.2019 வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு 1.9.2019 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
தேர்வுக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். இணைய வழியில் செலுத்தாமல் நேரடியாக செலுத்தும் வரைவு காசோலை, அஞ்சலக காசோலை போன்றவை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தேர்வாணையத்திற்கு செலுத்தப்படும் கட்டணம் எந்த சூழ்நிலையிலும் திருப்பி தரப்படாது.
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் வரும் காலிப்பணியிடங்களுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த விண்ணப்பத்தார்கள் மட்டுமே தகுதியுடையவர் ஆவர்.
இட ஒதுக்கீடு குறித்த தவறான தகவல்கள் ,தகுதிக்கான காரணிகளான வயது, வகுப்பு, பிரிவுகள், கல்வித்தகுதி, உடற் தகுதி போன்ற அடிப்படைத் தகுதிகள் குறித்த தவறான தகவல் கொண்ட விண்ணப்பங்களும் , முழுமையாக நிரப்பப்படாத விண்ணபங்களும் நிராகரிக்கப்படும்.
கலந்தாய்விற்கான நாள் மற்றும் நேரம் குறித்த தகவல்கள் ஏதும் விண்ணப்பத்தார்களுக்கு அஞ்சல்துறை மூலமாக அனுப்பப்படாது. இது குறித்த தகவல்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் எஸ்.எம்.எஸ், இமெயில் ஆகியவற்றின் மூலம் மட்டுமே விண்ணப்பத்தாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
புகைப்படம் , குறிப்பிட்ட ஆவணங்கள் மற்றும் கையொப்பம் இல்லாமல் அனுப்பப்படும் இணையவழி விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்தப் பின்னர் திருத்தம் செய்ய முடியாது. இணைய வழி மூலம் 14.7.2019 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.