இலக்கியப் படைப்பாளிகளை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் சாகித்ய அகாடமியின் ''யுவபுரஸ்கார்'', ''பால சாகித்ய புரஸ்கார்” விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
23 இந்திய மொழிகளைச் சேர்ந்த சிறந்த இளம் இலக்கியப் படைப்பாளிகளுக்கு ''யுவ புரஸ்கார்'' விருதும், சிறார் இலக்கியப் படைப்பாளிகளுக்கு ''பால சாகித்ய புரஸ்கார்'' விருதும் வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்காக 23 மொழிகளுக்கும் தனித்தனியே தேர்வுக்குழு அமைக்கப்பட்டு சிறந்த படைப்பாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு பெறுவோருக்கு செம்பு பட்டையமும், ரூ.50 ஆயிரம் பணமுடிப்பும் வழங்கப்படும்.
2019 தமிழ்படைப்புக்கான விருது, ''வால்கவிதை'' என்ற கவிதையை எழுதிய கவிஞர் சபரிநாதனுக்கும், அதேபோல் குழந்தை இலக்கியத்திற்கான ‘பால புரஸ்கார் விருது’ தேவி நாச்சியப்பனுக்கும் (தெய்வானை) வழங்கப்படுகிறது.