சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் முன்பதிவுகளை செய்ய ரசிகர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். இந்நிலையில் "அண்ணாத்த" திரைப்படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று (அக்.31) தொடங்கியது.
இதே போன்று நடிகர்கள் விஷால், ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள "எனிமி" திரைப்படத்துக்கும் ஆன்லைன் முன்பதிவு சூடுபிடித்துள்ளது.
இதையும் படிங்க: நாளை வீடு திரும்பும் நடிகர் ரஜினிகாந்த்?