சென்னை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டத்தை, கேலோ இந்தியாவில் (விளையாட்டு வளர்ச்சிக்கான தேசியத் திட்டம்) இணைத்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, சென்னை அயனாவரம் ஆர்.பி.எஃப். பரேட் மைதானத்தில் சிலம்ப சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை பாஜக தமிழ்நாடு இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுப் பிரிவு, அனைத்து சிலம்ப கூட்டங்களின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தின.
கேலோ இந்தியாவில் இணைக்கப்பட்ட சிலம்பம்
இந்நிகழ்ச்சியில் உலக சாதனை நிகழ்த்தும்விதமாக ஆயிரம் சிலம்பாட்ட வீரர்கள், இரண்டு லட்சம் முறை சிலம்பம் சுழற்றினர். மேலும் நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துகொண்டு, சிலம்ப வீரர்களை ஊக்குவித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது அண்ணாமலை நிகழ்ச்சி மேடையில் பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு எவ்வளவு வயதோ, சிலம்பத்திற்கும் அவ்வளவு வயது. சிலம்பத்தை கேலோ இந்தியா பிரிவில் பிரதமர் மோடி இணைத்துள்ளார்.
விளையாட்டை காக்க நடவடிக்கை
கிராமப்புற கலைகள், பாரம்பரிய விளையாட்டை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது” என்றார்.
நிகழ்ச்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள், சிலம்ப ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'அதிமுகவில் சில மாற்றங்கள் செய்வது அவசியம்' - செல்லூர் ராஜூ