சென்னை: கோவையில் தமிழக பாஜகவின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து சென்னை விமான நிலையம் வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "ரிசர்வ் வங்கி செப்டம்பர் மாதம் இறுதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக ரிசர்வ் வங்கி எந்த ஒரு 2000 ரூபாய் நோட்டையும் அச்சிடப்படவில்லை. இதன் நோக்கம் திரும்ப பெறப்படுவதுதான்.
இந்தியாவில் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டது. ஆனால் தற்போது அதன் மதிப்பு 3 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக மாறி உள்ளது. ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது டீமானிடேஷன் கிடையாது. கிளின் நோட் பாலிசிதான் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் பணம் பரிவர்த்தனையில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது. ஜி20-யில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை பற்றி நம் நாடு தான் சொல்லிக் கொடுக்கின்றது. இந்தக் கிளீன் நோட் பாலிசி அடுத்த ஆண்டு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட நடக்கலாம். இதையெல்லாம் தமிழக முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
மூட்டை மூட்டையாக பணத்தைப் பதுக்கி வைத்துவிட்டு தேர்தல் நேரத்தில் கொடுப்பது திமுக ஸ்டைல். இதனால் தான் திமுகவினருக்கு கோபம் வருகிறது. அவர்கள் 2024 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு பணத்தை மூட்டையில் கட்டி வைத்துள்ளனர். இதனால் முதலமைச்சருக்கு கோபம் வருகிறது. அந்த கோபம் ரசிக்கும் படியாக தற்போது உள்ளது.
நம் நாடு அடுத்த கட்டத்திற்கு செல்ல பிரதமர் மோடி எடுக்கக் கூடிய நல்ல முடிவுகள். இது புரியவில்லை என்றால் முதலமைச்சரின் ஏமாளித்தனத்தை தான் அவர் போட்டுள்ள ட்விட் காட்டுகிறது. திமுக இரண்டு ஆண்டு ஆட்சியில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடியை பதுக்கி வைத்துள்ளது. இதனை எப்படி மாற்றுவது என யோசித்து வருகின்றனர். இதனால் இனிவரும் காலங்களில் டாஸ்மாக் வரவு செலவு கணக்குகளை திமுக அதிகமாக காட்டும்.
கர்நாடகாவில் பாஜக படுதோல்வி அடைந்ததாக கூறுகின்ற திமுக, தமிழகத்தில் ஒன்று அல்லது இரண்டு எம்எல்ஏக்களை மட்டும் வெற்றி பெற்று படுதோல்வி அடைந்துள்ளனர். 39 எம்பிகளும் தோல்வி அடைந்து படு தோல்வி அடைந்துள்ளது. கர்நாடகா பொருத்தவரை இரண்டு ஆண்டுகள் சித்ராம்மையாவும், இரண்டு ஆண்டுகள் டி.கே.சிவகுமாரும் என்ற நிலைப்பாடு எடுத்துள்ளனர்.
இது ஆரம்பமே குழப்பமான சூழ்நிலையாக தெரிகிறது. அடுத்த ஒரு ஆண்டில் இருவரும் சண்டை போடாமல் இருந்தால் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். ஆனால் அது நடக்காது. பாஜக பல தேர்தலை சந்தித்துள்ளது. அதில் சிலவற்றில் வெற்றி பெற்றிருக்கிறது, சிலவற்றில் தோற்றிருக்கிறது. இதனை பாடமாக வைத்து அடுத்த கட்டத்தை நோக்கி பாஜக செல்லும்.
காவிரி அணையில் டி.கே.சிவகுமார் தடுப்பணையை கட்டுவேன் என கூறியுள்ளார். அதற்காக நிதி ஒதுக்கீடு செய்வேன் எனவும் தெரிவித்தார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவரின் பதவி ஏற்பு விழாவிற்கு இங்கு இருந்து செல்கிறார். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக முதலமைச்சர் மக்களின் நலனுக்காக இருக்கிறாரா என கேள்வி எழுகிறது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் பாஜகவின் வளர்ச்சியையும் எங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் கண்டிப்பாக அனைவரும் பார்ப்பார்கள். தமிழகத்தில் டாஸ்மாக் அனைவரையும் குடிகார மனிதர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. டாஸ்மாக்கை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பரவிவிடும் என திமுக கூறுகிறது. தமிழக மக்களை திமுகவினர் முட்டாள்கள் என நினைத்துள்ளனர் மிகப்பெரிய பதிலடி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு கொடுப்பார்கள்.
மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்குத்துறை இரண்டையும் செந்தில் பாலாஜியை பார்த்துக்கொள்வதால் எப்படி அவர் மேல் உள்ள ஊழல் வழக்கில் இருந்து வெளியே வரலாம் என்பதை மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்குவதில் எந்த கவனமும் இல்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு வருகிறது. எனவே அவரை பதவி நீக்கம் செய்து ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகின்றேன். நான் ஆளுனராக இருந்தால் கண்டிபாக செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கைகள் எடுப்பேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது சி.பி.ஐயில் அளித்த புகார் மீது நிறைய ஆதாரங்களை அவர்கள் ஆராய்ந்து வருவதாக தகவல் வருகின்றது. டாஸ்மாக் கடையில் 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை ஒரு பாட்டிலுக்கு வாங்குகின்றனர். என்னுடன் வாருங்கள் காட்டுகின்றேன். அமைச்சர் செந்தில்பாலாஜி 5 ஆயிரம் கடையிலும் சென்று முதலில் பார்த்தாரா என கேள்வி கேட்கின்றேன்.
மது ஒழிப்புக்காக இபிஎஸ் போராடினால் திருமாவளவன் இணைவேன் என்று கூறியுள்ளார். திருமாவளவன் தனியாக போராட பூஸ்ட் வாங்கி தர வேண்டுமா, திமுக கூட்டணியில் விசிக உள்ளதா? தமிழக முதலமைச்சராக ஸ்டாலினை ஏற்றுக் கொள்கிறாரா? இல்லையா? திமுக கூட்டணியில் வீசிக உள்ளதா? இல்லையா? என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தான் தெரிவிக்க வேண்டும்" என்று அண்ணாமலை கூறினார்.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி தானாக பதவி விலக வேண்டும் - அதிமுக முன்னாள் அமைச்சர் ம.சின்னச்சாமி