ETV Bharat / state

காங்கிரஸ் கட்சி ட்விட்டர் கணக்கு முடக்கம்- பாஜக காரணம் இல்லை என அண்ணாமலை விளக்கம் - etv bharat

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு பாஜக காரணம் இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

அண்ணாமலை விளக்கம்
அண்ணாமலை விளக்கம்
author img

By

Published : Aug 12, 2021, 3:52 PM IST

சென்னை: தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 75ஆவது சுதந்திர தின பாஜக லோகோவை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு பாஜக 75ஆவது சுதந்திர தின விழாவை மகிழ்ச்சி திருவிழாவாக கொண்டாட இருக்கிறோம்.

சுதந்திரத்துக்காக போராடிய 75 தலைவர்களின் இடங்களுக்கு, 75 பாஜக நிர்வாகிகள் சென்று வீரவணக்கம் செலுத்த உள்ளனர். அதேபோல், 1,104 இடத்தில் மாணவ-மாணவியர்கள் கொடி ஏற்ற பாஜக ஏற்பாடு செய்துள்ளது.

வரும் 16,17,18 ஆகிய மூன்று நாள்கள் 'மக்கள் ஆசி வேண்டி' என்ற யாத்திரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த யாத்திரை கோவையில் தொடங்க உள்ளது. ராஜ்யசபா எம்பி தேர்வினை பாஜக தலைமை முடிவு செய்யும்.

பாஜக லோகோ
பாஜக லோகோ

திமுகவின் 100 நாள் ஆட்சி வைத்து எதுவும் கூறிவிட முடியாது. ஆறு மாதத்திற்கு பிறகு தான் ஒரு ஆட்சியின் செயல்பாடு குறித்து முழுமையாக பேச முடியும். ஆனால் ஐஏஎஸ், ஐபிஎஸ் நியமனம் பாராட்டுக்குரியதாக இருக்கிறது.

ராகுல் காந்தி தொடர்ச்சியாக பொய் செய்திகளை வெளியிட்டார். அதனால் அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக காரணம் இல்லை. ட்விட்டரை அரசியலை ஆக்கியது காங்கிரஸ் கட்சி தான்.

அண்ணாமலை விளக்கம்

அதிமுக கூட்டணியில் தான் பாஜக தொடர்கிறது. கூட்டணியில் குழப்பமில்லை. உள்ளாட்சி தேர்தல் குறித்து குழு அமைத்து உள்ளோம். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக தயாராக வருகிறது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகே அது குறித்து முழுமையாக பேச முடியும். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை நேர்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வரவு-செலவுத் திட்ட அறிக்கை: தொழில் துறை எதிர்பார்ப்புகள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.