பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதில், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், வேலுமணி, ஓ.எஸ். மணியன், மக்களவை உறுப்பினர் ஓ.ப. ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நீதிமன்றத்தின் உத்தரவையடுத்தும் முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரிலும் பேனர்கள் அமைக்கப்படாமல் இந்த பிறந்தநாள் விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.