சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்(EEE) துறையின் தலைவராக பணியாற்றி வந்த டாக்டர் சந்திரமோகன் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். 28 ஆண்டு காலமாக பேராசிரியராக பணியாற்றிய அவர் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகளாகவும் அரும்பாடுபட்டவர் என பேராசிரியர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் சிறந்த பேராசிரியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை மறைந்த டாக்டர் சந்திரமோகன் பெற்றுள்ளார். அவர் பல ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கியதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து எலக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
புற்றுநோய் பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையின் தீவிர சிகிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பேராசிரியர் சந்திரமோகனின் இறப்பு அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன?