ETV Bharat / state

சூரப்பா மீதான கலையரசன் குழுவின் அறிக்கையை வெளியிட கோரிக்கை

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான நீதிபதி கலையரசன் குழுவின் அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் எனத் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

former-vice-chancellor-surappa
former-vice-chancellor-surappa
author img

By

Published : Sep 24, 2021, 10:13 AM IST

சென்னை: அகில இந்திய தனியார் கல்லூரிகளின் ஆசிரியர் கூட்டமைப்பு நிறுவனர் கார்த்திக் முதலமைச்சருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து நீதியரசர் ஏ.கே. ராஜன் குழு அறிக்கையைத் தமிழ்நாடு அரசானது பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளது.

குழுவின் அறிக்கைப்படி 2020ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் தேர்வெழுதிய மாணவர் எண்ணிக்கை ஏழு லட்சத்து 79 ஆயிரத்து 940, அறிவியல் பாடம் படித்து தேர்வு பெற்ற மாணவர்கள் இரண்டு லட்சத்து 64 ஆயிரத்து 399 மற்றும் நான்காயிரத்து 465 தமிழ்நாடு மாணவர்கள் இளநிலை மருத்துவப் படிப்புக்குச் சேர்ந்திருக்கிறார்கள்.

சூரப்பா மீதான அறிக்கையை வெளியிட கோரிக்கை

2.5 லட்சம் மாணவர்கள் மருத்துவம் சேரவில்லை. அவர்களில் சரிபாதி பொறியியல் கல்லூரிகளிலும், மீதமுள்ளவர்கள் அறிவியல் கல்லூரிகளிலும் சேருகிறார்கள். சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் சேரும் பொறியியல் படிப்பை எடுத்து நடத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை செய்த நீதியரசர் கலையரசன் குழு, தனது அறிக்கையை ஒரு மாதம் முன்னரே அரசின் முன் சமர்ப்பித்து இருக்கிறது.

தற்போது ஏ.கே. ராஜன் குழு அறிக்கையை வெளியிட்டதுபோல கலையரசன் குழு அறிக்கையையும் மக்கள் பார்வைக்குத் தமிழ்நாடு அரசானது வெளியிட வேண்டும். 2021ஆம் ஆண்டு மட்டும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், ஊழியர்கள், ஆராய்ச்சி மாணவர் என ஏழு பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

ஒரு ஆசிரியர் பனைமரம் ஏறி விபத்துக்குள்ளாகி இறந்துள்ளார். இந்த அறிக்கையை வெளியிட்டு அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் உரிய மாற்றங்கள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல தனியார் பள்ளி கல்லூரிகளில் நிகழ்ந்துள்ள இந்தத் தற்கொலைகள், அசாதாரண மரணம் அனைத்தையும் விசாரிக்க தனிக்குழு அமைக்கவும் 10 லட்சம் ஆசிரியர், ஊழியர் சார்பாக வேண்டுகோள்வைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர், ஊழியர்

  • வெங்கடேசன் கிருஷ்ணன் - பிப்ரவரி 2021 - குடும்பப் பிரச்சினை, பண கஷ்டம், பாவை கல்லூரி, நாமக்கல்
  • தமிழ்ச்செல்வன் - ஏப்ரல் 2021 - குடும்பப் பிரச்சினை, பண கஷ்டம், PGP பாலிடெக்னிக், நாமக்கல்
  • வேதமாணிக்ககம் (ஊழியர்) - ஜூலை 2021 - பண கஷ்டம், தென் தாமரைக்குளம், கன்னியாகுமரி
  • பத்மாவதி - 2021 - பண கஷ்டம், தாகூர் மெட்ரிகுலேஷன் பள்ளி, கடலூர்
  • லோகநாதன் - 2021 - பண கஷ்டம் - பனைமரம் ஏறி விபத்தில் சிக்கி இறந்தவர், நாசரேத் கல்லூரி, ஆவடி, சென்னை
  • மணிமொழி சீராளன் - 9 செப்டம்பர் 2021 - பண கஷ்டம், சங்கரா கல்லூரி, அசூர், தஞ்சாவூர்
  • கிருஷ்ணகுமாரி, 12 செப்டம்பர் 2021, - ஆராய்ச்சி வழிகாட்டியின் துன்புறுத்தல், அமிர்தா பல்கலைக்கழகம், கோவை
  • பிரவீன் குமார், செப்டம்பர் 2021, - தனியார் கல்லூரி பணி நீங்கியதால், தியாகராஜர் கல்லூரி, மதுரை

இதையும் படிங்க: முதலமைச்சரை சந்தித்த தர்மபுரி எம்.பி. - ஆண்டு பணி அறிக்கை ஒப்படைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.