இது குறித்து அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அருள் அறம், செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அண்ணா பல்கலைக்கழகத்தினைப் பிரிப்பதற்கு இயற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் அனுமதி அளிக்கக் கூடாது எனக் கூறியிருந்தோம்.
நான்கு மாதங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட கடிதத்தை தற்போது எழுதப்பட்ட கடிதம் என்பதாகச் சுட்டிக்காட்டி அண்மையில் வெளியாகியுள்ள செய்தியில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது, சிறப்புத் தகுதி விவகாரம் ஆகியவற்றில் துணைவேந்தர், தமிழ்நாடு அரசு, மத்திய அரசு, மாநில அரசுக்கு இடையே பிரச்னை நிலவுவதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து தற்போதுள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வேறு பெயர் சூட்டுவதற்கு எதிர்ப்பும், சிறப்புத் தகுதி வழங்க ஆதரவும் அளித்து துணைவேந்தரின் நடவடிக்கைகளுக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் துணை நிற்கும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க... 'ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்'