ETV Bharat / state

'துணைவேந்தராக சூரப்பா இருந்தபோது முறைகேடு... ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்' - vice chancellor surappa case

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Dec 23, 2021, 5:02 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல்செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கத் தடைவிதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவின்படி, நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல்செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில், சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்.

அதற்காக ஆணைய அறிக்கை, ஆளுநருக்கு அனுப்ப உள்ளோம்" எனத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: An earthquake in Vellore: வேலூர் அருகே நிலநடுக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.